வடகோவை – பீளமேடு ரெயில்வே தண்டவாளம் டெக்ஸ்டூல் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த முதியவரின் உடலை சோதனை செய்தனர். அவர் ஸ்வெட்டர் ...
பெங்களூரு: கர்நாடகாவில் மசூதிகளில் ‘அஸான்’ எனப்படும் பாங்கு ஒலிபெருக்கியில் ஓதுவதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு போட்டியாக இந்து கோயில்களில் ஒலிபெருக்கி மூலம் பஜனை பாடல்களை பாடும் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் ...
சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த அசானி, மச்சிலிப்பட்டினம்-நர்சாபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த ...
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவர். கடந்த 2017-ம் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருந்தார் சவுதாலா. அங்கிருந்தபடியே 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு எழுதினார். ஆனால் ஆங்கில பாடத் தேர்வை மட்டும் ...
உலகம் முழுவதும் கொரோனா கோர தண்டவம் ஆடியபோதும், வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என அந்நாடு தெரிவித்துவந்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லைகளை உடனடியாக மூடியதுடன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் வடகொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு ...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்க லஞ்சம் கேட்டு தொல்லை செய்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). ...
கொழும்பு: இலங்கையில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் டீசல், சிலிண்டர்கள், உரம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையில் மீண்டும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின் வெட்டு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி ...
அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சிக்கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா- விடை நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் தொகுதி, புனித தோமையர் மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு முன் வருமா? ...
சென்னை: கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம், தொல்பொருட்கள் நேர்த்தி ஆகியவை முதிர்ச்சியான நாகரீகத்துக்கு சான்றாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல்வழி ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கையில், மாண்புமிகு ...
காதல் மனைவி மும்தாஜ் மறைவையடுத்து, அவரது நினைவாக இந்த தாஜ்மகாலை முகலாய பேரரசர் ஷாஜகான் கட்டியுள்ளார். நினைவு சின்னங்களில் ஒன்றாக திகழும் தாஜ் மகாலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது மிகவும் விலை உயர்ந்த பளிங்கு கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கற்கள் ...