காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2வது முறையாக இன்று விசாரணை நடத்த உள்ளதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த முறை சோனியா காந்தி விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் தொண்டர்கள், போராட்டம், எதிர்ப்பு,ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, இன்று ராஜ்காட் பகுதியில் யாரும் போராட்டம் ...

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனிடையே, முதல்வர் நிதிஷ்குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை டெல்லி செல்ல முடியவில்லை. குடியரசு ...

சென்னை : அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை டான்சி வழக்கு மூலம் அலற வைத்த ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கைக்கும் அக்னிப்பரீட்சை வைத்துள்ளார். ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் முதல்வர் பதவி பறிபோனது. அப்போது முதல்வர் ஆனவர் தான் ஓ.பன்னீர்செல்வம். இன்று, ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு ...

அருள்மிகு வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி  வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...

சென்னை: பிரதமர் மோடி 2 நாட்கள் பயணம் சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இரு நாட்கள் பயணமாக சென்னை வருகிறார். ...

சென்னை: ஊழல் புகாரில் சிக்கிய நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை தமிழக அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் உள்ளது. இங்கு துறை சார்ந்த பிற அலுவலகங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து துறை துணை ஆணையராக நடராஜன் ...

புதுடெல்லி: கார்கில் வெற்றி தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளன. கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் ...

தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைப் பகுதியிலிருந்து வருபவர்களை ஸ்டேச்சுரேஷன் பரிசோதனை செய்து கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை சென்ற தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குரங்கம்மை பரிசோதனைக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ...

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் எம் பி ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடந்திருப்பதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக ...

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் அருந்திய 18 பேர் உயிரிழப்பு. குஜராத்தில் மதுவிலக்கு அமல் உள்ள நிலையில் பொடாட் மாவட்டம் மற்றும் சில கிராமங்களில் கள்ள சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக சிலர் கள்ள சாராயம் வாங்கி அருந்தி உள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு ...