சென்னை: அந்தமான் மீனவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை மத்திய அரசு விரைவில் செய்து கொடுக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அந்தமானில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ...

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில் ரிஷி சுனக் 88 வாக்குகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அந்த ...

எடப்பாடி கே பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 22 பேரை ஓபிஎஸ் நீக்குவதாக அறிவித்துள்ளார். எடப்பாடி கே பழனிசாமி, கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, உதயகுமார், ...

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து, ஜெட்டா எனும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள நகரத்திற்கு தப்பி சென்றுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து , வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அரசு மாலைகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் கட்டுப்படுத்த முடியாமல் தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு உத்தரவை ...

இத்தாலியில் அரசாங்க நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மரியோ ட்ராகி வியாழன் அன்று ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். முன்னதாக செனட்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் டிராகி வெற்றி பெற்றார்.பிப்ரவரி 2021 இல் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவால் டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. “இன்றிரவு குடியரசுத் தலைவரிடம் எனது ராஜினாமாவை சமர்ப்பிப்பேன் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்,” ...

பொன்னையன் பேசிய ஒரு ஆடியோவே எடப்பாடி அணியில் பெரும் புயலை வீசி இருக்கிறது. அதன் பின்னர் பொன்னையன் ஓபிஎஸ் இடம் பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாக அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார். அந்த ஆடியோவில் நாஞ்சில் கோலப்பன் போல முழு ஆடியோவை உடனே வெளியிடாமல் அந்த ஆடியோவில் இருக்கும் விஷயத்தை ...

நேற்று, லாக்ஹீட் மார்ட்டின் என்ற பாதுகாப்பு நிறுவனம் தயாரித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் DARPA ( Defence Advanced Research Projects Agency) என்ற பாதுகாப்பு திட்ட முகமை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள சாண்ட்ஸ் ஏவுகணைத் தளத்தில் தரையிலிருந்து ஏவப்பட்ட சோதனை நடத்தப்பட்டதாக DARPA தெரிவித்துள்ளது. அமெரிக்க ...

சென்னை: ஓ.பன்னிர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், எம்.பி, மருது அழகுராஜ் உள்ளிட்ட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓபன்னீர்செல்வத்தின் மகன்களான ரவீந்தரநாத், ஜெயபிரதீப் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர்களது மகன்களையும் கட்சியிலிருந்து ...

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் அவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்பொழுது, லேசான உடல் சோர்வு ஏற்பட்டது, இதனால் பரிசோதனை மேற்கொண்டேன் அதில் தொற்று உறுதி செய்யப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் தனது இல்லத்தில் தனிமைபடுத்திக்கொண்டிருந்த ...

ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த குரங்கு அம்மைத் தொற்று உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...