உத்திர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்த போது, அப்போதைய முதலமைச்சராக மாயாவதி இருந்த சமயத்தில் அமைச்சரைவையில் இருந்தவர் ஹாஜி யாஹூப் குரோஷி. இவருக்கு சொந்தமான இறைச்சி தொழிற்சாலை உத்திரபிரதேசத்தில் இருக்கிறது. அங்கு சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்கள் விவரங்கள் இருப்பதாக தகவல் கிடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சுமார் 100 கோடி மதிப்பிலான ...

மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்ஷே சிங்கப்பூர் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர். தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில், விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தலைநகர் ...

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 20,139 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 13,615 நேற்று 16,906 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,139 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ...

கீவ்: உக்ரைனில் அதிநவீன ஏவுகணை தாக்குதல் மூலமாக ஒரே நாளில் 420 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் உக்கிரமான போர் 130 நாட்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காகவே வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய படைகள் நாட்டில் பிற பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ...

அ.தி.மு.க- வை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையிலான இரு அணிகளும் சட்ட ரீதியாக தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதில், வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அதிமுகவில் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். குறிப்பாக துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், ...

டெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு, கொரோனா பரப்புவர், ...

மக்களவையிலும், மாநிலங்களிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, ...

மதுரை: மானாமதுரை அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதல் முறையாக பானை வடிவிலான உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சியாக மேம்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான கூடுதல் சான்றுகளை தேடி 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட ...

பிரதமரைச் சந்திக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சென்னையில், நடக்க உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொள்ள ...

அமெரிக்காவில் ஜூன் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக விரைவான அதிகரிப்பாக உள்ளது. இந்தியாவின் ஜூன் மாத பணவீக்க விகிதம் 7.1% ஆக உள்ளது. இது ஆர்.பி.ஐ.,யின் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவான 6 சதவீதத்தை விட அதிகம் தான் எனினும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ...