ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்திருக்கிறார் எடப்பாடி. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டது. ஓபிஎஸ் இனி பொருளாளர் மட்டுமே என்று சொன்ன எடப்பாடி, தான் தலைமை நிலைய செயலாளர் மட்டுமே என்று சொல்லி வந்தார். அதனால்தான், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் கையெழுத்திட்டு அனுப்பிய கடித்தை வாங்க மறுத்தார் ...

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கடை ஒன்றில் கடந்த 2018 நவம்பரில் விலைப் பட்டியலில் ரூ.100 மதிப்புள்ள இரு பேனாக்கள் சலுகை விலையில் ரூ.90 என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதனை கோவை, முதலிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உண்மை என நம்பி இரு பேனாக்களை ரூ.90 கொடுத்து வாங்கினார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது அந்த ...

கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான மழை மட்டுமே பெய்தது. இந்த நிலையில் கோவையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவையில் நேற்று காலையில் இருந்தே மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து சில பகுதிகளில் ...

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கோவையில் இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், உறுதி செய்யவும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை, உயர் கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து ...

கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் தனது நண்பர்களுடன் விளங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பத்ரசாமி என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமார் தலையில் ...

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி(வயது 65). இவர் தனது மகனுடன் நேற்று நெகமம் அருகே கக்கடவில் உள்ள தனது தோட்டத்துக்கு காரில் சென்றார். பின்னர் அங்கு பணிகளை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்தனர். காரை மயில்சாமி ஓட்டினார். கக்கடவில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக நெகமம் அருகே கோவில்பாளையம் ரோட்டில் வந்து கொண்டு ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்ப்படுத்தியுள்ளது இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள 2 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் மண்சரிவு ஏற்ப்பட்டது . ...

கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி .இவர் பேரூர் அனைத்து மகளீர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தனியார் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தேன். அப்போது கும்பகோணத்தைச் சேர்ந்த கவுதம் (வயது 20) ...

கோவை தடாகம் ரோட்டில் உள்ள கோவில் மேடு டாஸ்மாக் கடை அருகே சிலர் போதை மாத்திரைகளை பொடியாக்கி விற்பனை செய்வதாக சாய்பாபா காலனி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அப்போது போதை மாத்திரைகளை பொடியாக்கி விற்ற ஒரு வாலிபரை கைது செய்தனர்.,விசாரணை அவர் ...

காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். அப்போது 11 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது மீனவர்கள் இலங்கையில் இருக்கின்ற காரைக்கால் மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்டுத்தர வேண்டும். மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும். மீனவ கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர், சாலை வசதிகள் மேம்படுத்தனும் ...