கரூர்: கரூர் திருமாநிலையூரில் இன்று (ஜூலை 2) நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 80,750 பேருக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.518.44 கோடியில் 99 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 பணிகளை திறந்து வைக்கிறார். நாளை நாமக்கல்லில் நடைபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிலும் முதல்வர் பங்கேற்க உள்ளார். ...

கோவை ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு முகக்கவசம் இலவசமாக,’டிராப் என் டிரா’ என்ற புதிய முயற்சியின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில், உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் முயற்சி பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிராப் என் டிரா என்னும் திரும்ப ...

பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வகித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல்மைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பகவந்த் மான், அனைத்து வீடுகளுக்கும் ...

மூணாறு : கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்துள்ள நிலையில், 11 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் பலத்த மழைக்கான ‘எல்லோ அலெர்ட்’டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கேரளாவில், தென்மேற்கு பருவ மழை தற்போது தான் தீவிரமடைந்து பல பகுதிகளில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ...

அன்னூர்: நூல் விற்பனை விலை சரிவால் ஸ்பின்னிங் மில்கள் திணறுகின்றன. நூற்றுக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.அன்னூர் தாலுகாவில், கரியாம்பாளையம், கணேசபுரம், தெலுங்குபாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், கெம்பநாயக்கன்பாளையம், கஞ்சப்பள்ளி, ஊத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 125 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. 3,000 ஸ்பிண்டில் திறன் முதல் 50,000 ஸ்பிண்டில் திறன் வரை உள்ள இந்த ...

நாகர்கோவில் காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் 19 நிர்வான புகைப்படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக போலீசார் அறிக்கை தாக்கல் செய்ததை பார்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். மேலும், இந்த வழக்கில் 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்னும் பல சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டிய உள்ளதால், காசியின் தந்தை ...

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சற்றுமுன் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் பதவியேற்ற நிலையில் அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்பதும் ஏக்நாத் ஷிண்டே திடீரென தனது ஆதரவாளர்களை வைத்து உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்தார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில ...

அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள், புதிய மாணவர் சேர்க்கை, உயர்கல்வி பயில உள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் விநியோகம் உள்ளிட்ட பணிகள் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ...

நாட்டில் வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்,அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை இன்று அவர் வெளியிட்டார். அவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலில் முதன்மையான மாநிலங்களின் பிரிவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு ...

சிங்கப்பூரின் DS-EO உள்ளிட்ட மூன்று செயற்கைக் கோள்களுடன் PSLV – C53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டை இம்மாத இறுதியில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு செயற்கைகோள்களையும் வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பும் பணியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூருக்கு சொந்தமான DS-EO, ...