கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது .நேற்று முன்தினம் 89 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பின்னர் நேற்று கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியது. நேற்று மட்டும் புதிதாக 104 பேருக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் ...

டெல்லி: நாட்டில் பல இடங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து டாப் மருத்துவர்கள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் லேசான பாதிப்பையே ஏற்படுத்தியதால், டெல்டாவை போல உயிரிழப்புகள் அதிகமாகப் பதிவாகவில்லை. மேலும், ஓமிக்ரான் கொரோனா ...

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது, சாதாரண, நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி வங்கி ...

அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று  (26/06/2022) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை விமான ...

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். நாவலூர் சுங்கசாவடியில் 2036ம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூலையில் ...

என்னை மூன்றாம் கலைஞர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான ...

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அலங்கார விளக்குகள் எல்இடி திரை மற்றும் பொழுதுபோக்கு தளங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே கோவை மாநகராட்சியுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் இலவச வைஃபை இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக Wi-Fi மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ...

டெல்லி: இந்தியாவில் காற்று மாசு காரணமாக மக்களின் சராசரி ஆயுள் காலம் 5 ஆண்டுகள் குறையும் என்ற அதிர்ச்சித் தகவல் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்திருக்கும் நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறது. உலக புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏர் குவாலிட்டி லைப் இண்டெக்ஸ் (AQULI) ...

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக திமுக அரசு அனைத்து உதவிகளையும், ஆதரவினையும் நல்கி வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் ...

தமிழகத்தின் கொரோனா அதிகரித்த 6 மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணியாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நகரங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. ...