கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமனம் செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.நம் அண்டை நாடான இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. இதனால், மின் உற்பத்தி தடை, விலைவாசி உயர்வு என, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து ...

கள்ளக்குறிச்சி மாணவி உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய பெற்றோர் தொடர்ந்து ...

இந்தியாவின் 15வதுகுடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடி இன் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவைத் தேர்ந்தெடுத்தது. ...

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அடுத்த வாரம் வர உள்ளது. கடந்த ஜூலை 11- ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதிக்கக் கூடாது என்று, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த ...

சென்னை: அடுத்த மாதம் மதுரையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நீர்வளத்துறை துரைமுருகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 2022-23- ம் ஆண்டுக்கான நிதிவருவாய் உள்ளிட்ட விசயங்கள் குறித்தும் ...

தெலுங்கானா மாநிலம், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (23). இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.எம் நிறுவனத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தீனா, தன்னுடைய முயற்சியால் யூ-டியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் ஆன்லைன் விளையாட்டு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவர் உருவாக்கிய யூ-டியூப் ...

அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியது தான் தி.மு.க. அரசின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் ...

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இந்த தோட்டங்களில் பலா மரங்கள், மூங்கில்கள் அதிகளவில் உள்ளது. தற்போது பலா சீசன் தொடங்கி உள்ளதால், மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகிறது. இதனை ருசிப்பதற்காக கடந்த சில வாரங்களாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதை மற்றும் கோத்திகிரி-மேட்டுப்பாளையம் சாலைகளில் ...

கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக திருப்பத்தூர் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்த அரவிந்தன் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 ...

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பஜார் குடியிருப்பு பகுதியில் கடந்த ஆண்டு பிறந்த 8 மாதமே ஆன புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது. வழக்கமாக புலிக்குட்டிகள் தாயுடன் இருக்கும் போது வேட்டையாட கற்றுக்கொள்ளும். ஆனால் இந்த புலிக்குட்டி 8 மாதமாக இருக்கும்போதே வனத்துறை பராமரிப்பிற்கு வந்துவிட்டதால் வேட்டையாட தெரியாமல் சிரமப்பட்டது. எனவே புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி ...