பெங்களூரு: கர்நாடகாவில் மசூதிகளில் ‘அஸான்’ எனப்படும் பாங்கு ஒலிபெருக்கியில் ஓதுவதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு போட்டியாக இந்து கோயில்களில் ஒலிபெருக்கி மூலம் பஜனை பாடல்களை பாடும் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் ...

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த அசானி, மச்சிலிப்பட்டினம்-நர்சாபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த ...

திருப்பூரில் இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபருடன் ஒன்றாக வாழ்ந்த பெண்ணை மதம் மாற்ற வற்புறுத்தி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார். திருப்பூரை சேர்ந்த இமான் ஹமீப் என்பவர் கரூரை சேர்ந்த பவித்ரா (21) என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார். இருவரும் திருப்பூரில் ஒன்றாக தங்கி இரண்டு மாதம் வாழ்ந்த நிலையில், பவித்ராவை மதம் மாற்ற ...

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவர். கடந்த 2017-ம் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருந்தார் சவுதாலா. அங்கிருந்தபடியே 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு எழுதினார். ஆனால் ஆங்கில பாடத் தேர்வை மட்டும் ...

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், ஒரு வாரத்திற்குள் ...

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தின் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஒட்டுமொத்த இலங்கையும் கலவரக் காடாக காட்சியளிக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே, ...

உலகம் முழுவதும் கொரோனா கோர தண்டவம் ஆடியபோதும், வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என அந்நாடு தெரிவித்துவந்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லைகளை உடனடியாக மூடியதுடன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் வடகொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு ...

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்க லஞ்சம் கேட்டு தொல்லை செய்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). ...

ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையேயான பிரச்சனைக்கு தீர்வாக பள்ளிகளில் காலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ...

கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இரட்டை குழந்தை பெற்ற தம்பதியினர் தங்கள் குழந்தையில் ஒரு குழந்தையை வேறொரு தம்பதியினருக்கு தத்துக்கொடுத்துள்ளனர். இதனை 20 ரூபாய் பத்திரத்திலும் பதிவு செய்து நிறைவேற்றியுள்ளனர். இது சிறார் நீதிச் சட்டம் பிரிவு 80ன் கீழ் மாஜிஸ்திரேட்டால் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் இரு தம்பதினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதை ...