ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை ...

மத்திய அரசு தேச துரோக வழக்கு தொடர்பான சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர போராட்டத்தை அடக்குவதற்காக தேச துரோக வழக்கு சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.இந்த சட்டப்பிரிவு தற்போது வரை அமலில் உள்ள நிலையில்,பழிவாங்கும் நோக்கம்,அரசியல் காரணத்திற்காக அவை பயன்படுத்தப்படுகின்றது எனவும்,அதனை நீக்க கோரியும் மூத்த நாடாளுமன்ற ...

சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உயர்த்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை புறநகர் பகுதியில் தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாகவும், புதிதாக மாநகர காவல் ஆணையரகமும் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டுக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு நடந்தது. தற்போது, தாம்பரம் ஜிஎஸ்டி ...

கொழும்பு: இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ளலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீதும் தூப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முப்படையினருக்கு அனுமதி வழங்கி இலங்கை அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மக்கள் அமைதி காக்க ...

வரும் கல்வியாண்டு ( 2022-2023 ) முதல் அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பினை ...

கொழும்பு: இலங்கையில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் டீசல், சிலிண்டர்கள், உரம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையில் மீண்டும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின் வெட்டு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி ...

அரசு ஊழியர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு என அறிவிப்பு. ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, பள்ளிக்கல்வித்துறை தனி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் ...

சென்னை: மின்சார கொள்முதல் தொடங்கி சட்டசபை இடமாற்றம் வரை பல தகவல்களை பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருவது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்முடைய கோட்டையில் எங்கு ஓட்டை உள்ளது. யார் மூலமாக தகவல்கள் கசிகின்றன என்று கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர் மு.க. ஸ்டாலின். மாமல்லபுரத்தில் புதிய சட்டசபையை அமைக்க திமுக ...

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று சென்னை பெரம்பூர் அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ...

அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சிக்கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா- விடை நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் தொகுதி, புனித தோமையர் மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு முன் வருமா? ...