சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு மொத்தம் எண்ணிக்கை எண்ணிக்கை 111-ஆக உயர்வு. சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு 111-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 111 பேரில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். ...

மும்பை: இந்தியாவின் எதிர்காலம் மாட்டு வண்டிகள் தான் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.தற்போது, மின்சார வாகனங்கள் குறித்து பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. அனைத்து நாடுகளும், இந்த வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. மக்களும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் உலகளவில் மின்சார ...

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காடு, பெத்திக்குட்டை பிரிவு, பெத்திக்குட்டை சுற்று, இரட்டைக் கண் பாலம் வனப் பகுதியில் பிரிவு வனவர், சுற்று வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் நேற்றுரோந்து சுற்றிவந்தனர் .அப் போது மாலை வனப்பகுதி எல்லையிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ...

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். இதேபோல் கோவை மாநகர், புறநகர், மற்றும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரெல்வே போலீஸ் துணை சூப்பிரண்டு யாஷமின் மேற்பார்வையில் ...

கோவை மாவட்டம் காரமடை ,பாலாஜி நகரை சேர்ந்தவர் டாக்டர்.ராம் தீபிகா . இவர்மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் இவர் மேட்டுப்பாளையத்திலிருந்து காரமடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார் .அப்போது அவரது இரு சக்கர வாகனத்தை, பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 ஆசாமிகள் ...

நாடு முழுவதும் தொழுநோய் பாதிப்பை கட்டுப்படுத்த 1983-ம் ஆண்டு தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்கீழ் கூட்டு மருந்து சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் தொழுநோய் பாதிப்பின் தீவிரத்தன்மை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கஹீனம் ஏற்படுவதும் பெருமளவு குறைந்துள்ளது. தொழுநோயால் உடல் அங்கஹீனம் ஏற்படுபவர்களுக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அங்கஹீனம் ...

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் ரூ.1 கோடியே 75 லட்சத்தில் நிரந்தர வண்ண விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. சென்னை மாநகரின் அடையாளமாக ரிப்பன் மாளிகை உள்ளது. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் இதில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த மாளிகையில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நாட்களில் மாநகராட்சி ...

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த நாணயம் வட்ட வடிவில் 44 மில்லிமீட்டர் விட்டம், 35 கிராம் நிலையான எடையுடன் இருக்கும்.. இது, 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் ...

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் பல வண்ண ஒளிவட்டம் தோன்றியது. வானம் மேகமின்றி தெளிவாக உள்ள நிலையில், ஒளி வட்டம் வானவில் போல பல வண்ணத்துடன் காட்சி அளித்தது. பொதுமக்கள் இந்த ஒளிவட்டத்தை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். வெளிப்புறம் இளம்பழுப்பு நிறம், உட்புறம் சிவப்பு மற்றும் பிற வண்ணக் கலவையுடன் ரசிக்கும்படி ...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக ஆளும் திமுக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதே காரணத்தை முன்வைத்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ஆளுநர் வைத்த தேநீர் விருந்தையும் திமுக அரசு புறக்கணித்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் வகையில் ...