கோவை பெண் டாக்டரிடம்நூதன முறையில் ரூ.19 லட்சம் மோசடி. சைபர் கிரைம்போலீசில் புகார் . கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 32 வயது பெண் . இவர் மனநல டாக்டராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:-நான் கோவையில் மனநல மருத்துவராக உள்ளேன் கடந்த சில ...
கோவை:JEE-நிலைத் தேர்வில் கோவையை சேர்ந்த மாணவி தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இருகட்டமாக நடத்தப்பட்டு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட அனைத்து கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வால்பாறை நகராட்சி நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.செந்தில்குமார் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்த கனமழையின் காரணமாக வால்பாறை அருகே உள்ள சக்தி, தலனார் , கவர்க்கல் எஸ்டேட் பகுதிகளில் சேதமடைந்த இடங்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள பள்ளி மற்றும் சத்துணவு மையத்தின் மேல்கூரை மழை நீர் கசிந்து கொண்டு இருந்த பகுதிகளையும் வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் நேரில் ஆய்வு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் ஆய்வாளர் கற்பகம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதேபோல வால்பாறை முடிஸ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை சந்தித்து அனைவரும் பாதுகாப்பு மற்றும் விடியல், காவலன் ...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வரும் ப்ரிமெட்ரிக்(9-10 வகுப்பு) கல்வி உதவி தொகை திட்டத்துடன் சுகாதாரமற்ற(செருப்பு தைத்தல், தோல் தொற்சாலை, துப்புரவு பணி, போன்றவை) தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான(1-10 வகுப்பு) கல்வி உதவி தொகை திட்டமானது இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த ப்ரிமெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டமாக ...
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைப்பதில் அரசியல் பார்க்க வேண்டாம்- கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள். நாளை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் கோவையில் கொண்டாடப்பட உள்ளது. அவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது பிறந்த நாளை “வைரமுத்து இலக்கியம் 50” என கோவை கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி ...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் மூன்றாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ...
கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிங்கார வேலன். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகன் சவுரி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துள்ளார். அதனை அடுத்து அரசு கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க, டி.சி தேவைப்படுகிறது. ...
கோவையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் பெண்கள் மற்று முதியவர்கள் கைக்குழந்தைகளுடன் வந்து யாசகம் பெற்று வருகின்றனர். இதனால் சில நேரங்களில் சிக்னல்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதில் சிலர் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்தது. இதனை தடுக்க கோவை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் ...