அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியைப் பிடிக்க கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிச்சாமி தீவிர நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது அவர் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை பிடித்து விட்டார் ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ பன்னீர்செல்வமும், ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமியும் கூறி ...
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் பதவி ஏற்றுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன பழனிச்சாமி தரப்பு நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார். தொண்டர்களுடன் இணைந்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் ...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெளர்ணமியையொட்டி இன்று முதல் 14 ஆம் தேதி வரை பக்தர்கள் சென்று வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு மாத பிரதோஷம், ...
இந்தியாவில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாதச் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடன் தொகையை திரும்பச் செலுத்தாமல், பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் ...
நடிகரும் , இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கலைத்துறை தாண்டி பல்வேறு சமூக சேவை ஈடுபட்டு வருகிறார். இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் நடத்தி வருவதுடன் , தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார். மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவது, முதியவர்களுக்காக தங்கும் மற்றும் உணவு வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தருவது என ராகவா லாரன்ஸின் ...
அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து புறப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அங்கு, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ...
ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்குமாறு பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், ஒபிஎஸ்-ஐ கட்சியின் அனைத்து அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுக்குழு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அவரது ஆதரவாளர்களை நீக்கும் தீர்மானம் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் `ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்க வேண்டும்’ என தொண்டர்கள் கோஷமிட்டனர். அப்போது ...
அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நிக்க வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்புத் தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கொண்டுவந்தார். கட்சி விதி 35-இன் படி ஓபிஎஸ் ...
அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு அறிவித்தது.நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில்,அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ...
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி, அமைதி நகர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்குரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கோபிநாத்,சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன்,மற்றும் போலீசார் நேற்று அங்கு தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை ...