தமிழகத்தில் பேருந்து சேவை வழங்கப்படாத கிராமங்களை கண்டறிந்து விரைவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் புதன்கிழமை பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சென்னையில் தேவைக்கேற்ப சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ...

புதுடெல்லி: 4 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்துக்கான ரூ.20,860.40 கோடியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணரான் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளமான ட்விட்டரில் மத மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருத்து பதிவிட்டதாக கல்யாணரான் மீது குண்டாஸ் போடப்பட்டிருந்தது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய ...

நடிகர் அஜித்குமார் கேரளாவில் உள்ள குருகிருபா பராம்பரிய வைத்திய மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். அவரது சிகிச்சை நிறைவடைந்த நிலையில் தனக்குக் கனிவான உபசரிப்பு வழங்கிய நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் கைப்பட நன்றி கடிதம் ஒன்றை எழுதி அதை வழங்கிவிட்டு வந்திருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளித்த உன்னிகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவரையும் அதில் குறிப்பிட்டு, ...

நீதிமன்ற உத்தரவை மதிக்காவிடில் சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனையே பிரதானமாக இருக்க இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயல் என்பது பணியில் நேர்மையுடன் செயல்படாததை காட்டுகிறது என்றும் அரசு பதவியை, லஞ்சம் ...

தலைநகர் டெல்லியில் தி.மு.க அலுவலக திறப்பு விழாவுக்காகவும், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் பலரை சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசுப் பள்ளிகளை அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவாலுடன் ...

உலக மக்கள் தொகையில் 200 கோடி பேர் அதாவது நான்கில் ஒருவர் போர் உள்ளிட்ட மோதல்கள் நடைபெறும் பகுதியில் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐநா கூட்டம் ஒன்றில் பேசிய அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் 2ஆம் உலகப்போருக்கு பின் மோதல் நிறைந்த சூழலில் அதிகளவிலான மக்கள் வசிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ...

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  (31/03/2022) காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அத்துடன், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்க கச்சத்தீவை ...

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து ஒரு மாதம் கடந்துள்ளது. இதற்கிடையே, ரஷியாவுக்கு எதிராக மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையை கடைபிடித்து வருகிறது. இதன் காரணமாக, ரஷிய ரூபிள்லேயே வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷியா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டம் குறித்து இந்தியா ஆலோசனை மேற்கொண்டு ...

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டதை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ...