அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செல்வராசு தலைமை ...

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை இந்தியா வருகிறார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் முதல் உயர்மட்ட பயணமாகும். லாவ்ரோவ் ...

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம், இன்று நள்ளிரவு முதல் உயர்கிறது. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சுங்க கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கீழ் உள்ள சாலையின் சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயரும் என, மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இதன் ...

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல என்றும், கூட்டாளிகள் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, திடீர் பயணமாக கடந்த 25-ம் திகதி இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ...

டெல்லி: இலங்கையில் சீனா செயல்படுத்த இருந்த மின் உற்பத்தி திட்டங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா- இலங்கை இடையே கையெழுத்தானது. பிம்ஸ்டெக் எனப்படும் வங்கக்கடல் பகுதி நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இலங்கையில் தமிழர்கள் அதிகம் ...

தொடர்ந்து 10 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. ஆயினும் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக 5 மாநில சட்டப்பேரவை ...

டெல்லி : இந்தியா, வங்காளதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய வங்கக்கடல் நாடுகள் இணைந்து, பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்காக பிம்ஸ்டெக் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்நிலையில், பிம்ஸ்டெக் அமைப்பின் 5-வது மாநாடு இலங்கையில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசியபோது, கடந்த சில ...

பாகிஸ்தானில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் முக்கிய கூட்டணியான பாகிஸ்தான் முட்டாடிடா குவாமி இயக்கம் (MQM-P) எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் உடன்பாடு ஒன்றை எட்டிய நிலையில் இம்ரான் கானிற்கு அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது. முன்னதாக இம்ரான் கான் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கீழ் சபையில் பெரும்பான்மையை இழந்த நிலையில், ட்வீட் செய்த PPP தலைவர் ...

டெல்லி: டெல்லி சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்த பயணத்தில் இன்னொரு முக்கியமான அமைச்சர் ஒருவரையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.. ஏன் அந்த சந்திப்பு நடக்கிறது.. பிளான் என்ன என்று பார்க்கலாம்! முதல்வர் ஸ்டாலின் தனது சர்வதேச பயணத்தை முடித்துவிட்டு ...

டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு தி.மு.க. எம்.பி.க்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லியில் இன்று பிற்பகல் ...