பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி(வயது 65). இவர் தனது மகனுடன் நேற்று நெகமம் அருகே கக்கடவில் உள்ள தனது தோட்டத்துக்கு காரில் சென்றார். பின்னர் அங்கு பணிகளை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்தனர். காரை மயில்சாமி ஓட்டினார். கக்கடவில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக நெகமம் அருகே கோவில்பாளையம் ரோட்டில் வந்து கொண்டு ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்ப்படுத்தியுள்ளது இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள 2 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் மண்சரிவு ஏற்ப்பட்டது . ...

கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி .இவர் பேரூர் அனைத்து மகளீர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தனியார் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தேன். அப்போது கும்பகோணத்தைச் சேர்ந்த கவுதம் (வயது 20) ...

கோவை தடாகம் ரோட்டில் உள்ள கோவில் மேடு டாஸ்மாக் கடை அருகே சிலர் போதை மாத்திரைகளை பொடியாக்கி விற்பனை செய்வதாக சாய்பாபா காலனி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அப்போது போதை மாத்திரைகளை பொடியாக்கி விற்ற ஒரு வாலிபரை கைது செய்தனர்.,விசாரணை அவர் ...

காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். அப்போது 11 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது மீனவர்கள் இலங்கையில் இருக்கின்ற காரைக்கால் மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்டுத்தர வேண்டும். மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும். மீனவ கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர், சாலை வசதிகள் மேம்படுத்தனும் ...

எடப்பாடிக்கு எதிராக ஒவ்வொரு அஸ்திரமாக எடுத்து வரும் ஓபிஎஸ் கடைசி பிரம்மாஸ்திரமாக கொடநாடு வழக்கை கையில் எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு எழுந்திருப்பதால், கொங்கு மண்டலத்தை மாஜி மும்மூர்த்திகள் பதைபதைப்பில் உள்ளனர் என்று தகவல். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீசாரின் மறுவிசாரணை இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 90% விசாரணை முடிவடைந்து இருக்கிறது. இன்னும் ...

கோவை அருகே உள்ள வீர கேரளம், திம்மையா நகரை சேர்ந்தவர் பொன்சுப்பையன். ( வயது 51) இவர் அங்குள்ள பெரியார் நகர் 6-வது வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் மர்ம ஆ சாமிகள் புகுந்து அங்கிருந்த பணம் ரூ 5200 மற்றும் 10 பாக்கெட்டு சிகரெட் ஆகியவற்றை திருடி சென்று ...

கோவை சரவணம்பட்டி பி. அன்ட்.. டி காலனியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் தாரணி ( வயது 24) பி. இ பட்டதாரி. இவருக்கும் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவனாம்பாளையம், ராமகிருஷ்ணாநகரை சேர்ந்த சவுந்தர்ராஜ் என்ற செல்வராஜ் மகன் ஆகாஷ்ராஜ் (வயது 28) என்பவருக்கும் 22- 10- 20 18 அன்று திருமண நடந்தது.திருமணத்தின் போது ...

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் முத்துசாமி செட்டியார் வீதி சேர்ந்த ரமேஷ் .இவரது மனைவிபுனித வள்ளி ( வயது 33) இவர் கோவையை சேர்ந்த செந்தில்குமார் ,ரேவதி ஆகியோரிடம் தனது கணவருக்கும் ,தம்பிக்கும் அரசு வேலை வாங்கித் தருமாறு கூறி2017 ஆம் ஆண்டு ரூ 14 லட்சம் கொடுத்து இருந்தாராம். செந்தில்குமாரும், ரேவதியும் வேலை கொடுக்கவில்லை.பணத்தையும் திருப்பிக் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள ஊஞ்சபாளையம் ,இந்திரா நகரை சேர்ந்தவர் மணி ஆனந்த் (வயது 40) எலக்ட்ரீசியனாகவேலை பார்த்து வந்தார் .இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் சில பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தார். இதனால் இவர் சம்பாதிக்கும் பணம் இவரது செலவுக்கு போதுமானதாக இல்லை..இதனால் மனம் உடைந்த மணி ஆனந்த் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...