உத்தர பிரதேசம் வாரணாசியை சேர்ந்த சுவாமி சிவானந்தாவுக்கு 126 வயதாகிறது. யோகா குருவான அவர் இந்த வயதிலும் நாள்தோறும் யோகாசனம் செய்து வருகிறார்.அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. விருதை பெறுவதற்காக, சுவாமி சிவானந்தா யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நடந்து வந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை பார்த்ததும், அவருக்கு முன்பாக தரையில் ...

சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள விநாயகர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியது: தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறாத, குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோயில்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு ...

புதுடெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்வினையாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. அதையடுத்து, பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து கச்சா ...

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த உயர்நிலை தொழில் துறை குழுவினர் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே அனைத்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த யுஏஇ குழுவினர் நேற்று முன்தினம் நகர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ...

கொழும்பு ; இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி இரட்டிப்பாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு கோப்பை தேநீரின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பை அரசு சமீபத்தில் வெகுவாக குறைத்தது. இதனால் ஏற்றுமதி, சுற்றுலா துறை பாதித்தது. இதன் காரணமாக அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கியது. இதனால், அங்கு கடும் ...

சென்னை: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்ற பாரதியாரின் கனவு இன்றைய காலகட்டத்தில் நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். செய்யும் பணியில் ஆண் பெண் என்ற பேதம் பார்க்காமல், எல்லா வேலைகளையும் பெண்கள் செய்யும் காலம் இது. அதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டமன்ற வரலாற்றில் ...

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார். கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் ...

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்றும், தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நேற்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ...

சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம்  மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. சீனா குவாங்ஸி மாகாணத்தில் இருந்து சென்ற போயிங் 737 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. குன்மிங்கில் ...

கர்நாடகாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது இஜாஸ்க்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தை இருப்பதை அறிந்து விவாகரத்து கோரியதற்காக 26 வயது பட்டதாரி பெண்ணான அபூர்வாவை 23 இடத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். அபூர்வா ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர். முகமது இஜாஸ் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். அபூர்வாவை, திருமணம் செய்து கொண்ட பிறகு அவரது பெயர் அர்ஃபா ...