ராமநாதபுரம்: ”தமிழகத்தில் ரவுடிகள், குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு ஒழிக்கப்படுவார்கள்,” என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குற்றச்சம்பவங்கள் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கை, இனி செய்ய வேண்டியது குறித்துஆய்வு கூட்டம் டி.ஜி.பி., சைலேந்திர பாபு தலைமையில் நடந்தது. தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், ராமநாதபுரம் டி.ஜ.ஜி., மயில்வாகனன், எஸ்.பி.,க்கள் கார்த்திக் (ராமநாதபுரம்), செந்தில்குமார் ...

மதுரை: தாலிக்கு தங்கம் திட்டம்தான் உயர் கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டமாக மாற்றப்பட்டுள்ளது என்று மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாநகராட்சி வெள்ளிவீதியார் ...

சென்னை : சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.மறைந்த முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு உயர் மருத்துவமனை கட்டப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதற்காக ...

கோவையில் உதயநிதி ஸ்டாலின் : தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 524 பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் என ரூ.52,40,000 மற்றும் 500 மகளிருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் ...

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.அந்த வகையில்,முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டத்தின் மூலம் 3,000 பம்பு செட்டுகள் 70 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,செல்போன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து பம்பு ...

கர்நாடக நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மற்றும் மோடியையும் தவறாக பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கைது செய்யப்பட்டார். ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என்று கூறி மாணவிகளின் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ...

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷியாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தனமரத்தில் செய்யப்பட்ட ‘கிருஷ்ண பங்கி’ எனும் கலைப்பொருளைப் பரிசாக அளித்தார். இதன் முனைகளில் சிறிய பாரம்பரிய மணிகள் உள்ளன. காற்றின் திசைக்கேற்ப அவை அசையும். மேலும் திறப்பிடங்கள் போலவும் அதில் செதுக்கப்பட்டுள்ளது. அதில் அன்பு மற்றும் இரக்கத்தை ...

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலிசோம்னோ கிராபி எனப்படும் குறட்டை நோய் பரிசோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக மருத்துவக் கல்லூரி முதல்வா் ஏ.நிா்மலா கூறியிருப்பதாவது: அதிக உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஏற்படும் குறட்டை நோய் பாதிப்பைக் கண்டறியும் பாலிசோம்னோ கிராபி கருவி, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமாா் ரூ.15 ...

பிஜிஆர் நிறுவன விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான BGR எனர்ஜி நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் அரசு வழங்கியது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், மதுரையில் ...

ரஷ்யா உலகின் மிக பயங்கரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை அந்த நாட்டு வீரர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை மிகவும் தீவிரமான முறையில் நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனிடையே ரஷ்ய வீரர்களுக்கு மிகவும் கொடூரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்று வரும் ...