தனது தந்தை ராஜீவ் காந்தி மன்னிப்பின் மதிப்பை கற்றுத்தந்தார் என ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். அவரின் 31வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கோவை சென்றார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சி மற்றும் கோவை வ.ஊசி, மைதானத்தில் நடைபெறும் பொரு நை அகழ்வாராய்ச்சி கண்காட்சிம் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் கண்காட்சியை முதல்வர் திறந்துவைத்துப் பார்வையிடுகிறார். இந்த நிலையில் இன்று ஊட்டி சென்ற ...
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளில் ஒன்றாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணை 143 அடி கொள்ளளவை கொண்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகின்றது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ...
வாஷிங்டன்: அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளாத நிலையில், அந்நாட்டில் குரங்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரத்தைச் சேர்ந்த நபர் தனது நண்பர்களை சந்திப்பதற்காக ஏப்ரல் இறுதியில் கனடாவிற்கு சென்று மே மாத தொடக்கத்தில் அமெரிக்கா திரும்பினார். அவருக்கு தொடர் காய்ச்சல், உடலில் கொப்புளங்கள் ...
இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார சரிவு வரலாறு காணாத அளவிற்கு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் களம் இறங்கிய நிலையில், அரசியல் நெருக்கடியும் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து எப்படி மீண்டு வருவது என ...
கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து,எஸ்பி வேலுமணிக்கு தொடர்புடைய ...
தமிழகத்தில் உள்ள 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ...
சென்னை: பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்படக்கூடியது இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 142-வது பிரிவைபயன்படுத்தி, தனிச் சிறப்பு உடையதாக ...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்த மாதம் இருபத்தி நான்காம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. அடுத்த வாரம் டோக்கியோவில் நடைபெற உள்ள “குவாட்” நாடுகள் மகாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே மாதம் ...
நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1.5 லட்சம் முதல் 2 ...