சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. டெல்லி, கேரளா, ஹரியானா ...

மதுரை : மதுரை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், அங்குள்ள பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து மின்மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. ...

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின் தேவை இருக்கும்போது 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் ...

சென்னை: மாத்தூர் எம்எம்டிஏ பிரதான சாலையை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(39). தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் தனது நண்பர் சந்தோஷ்குமாருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு அருகில் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ்(22), மகேஷ்(23), லோகநாதன்(25) ஆகியோர் போதையில் ...

தேர்தல் வியூகம் வகுத்தனர் பிரசாந்த் கிஷோர் கடந்த 16, 18 தேதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் மூன்றாவது முறையாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். முதல் சந்திப்பின் போது மட்டும் ராகுல்காந்தி இருந்திருக்கிறார். அடுத்த இரண்டு சந்திப்புகளிலும் ராகுல் இல்லை. அவர் சொந்த விஷயம் காரணமாக ...

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி பதிலளித்து பேசியதாவது: வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனை ஆகாமல் இருக்கிற வணிக அலகுகள் 1,082 ஆகும். விற்பனை ஆகாமல் இருக்கும் குடியிருப்புகள் 3,505, மனைகள் 5,074 ஆகும். மக்களுடைய எதிர்பார்ப்பை கணக்கிட்டு அவற்றை ...

ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், ஒருவர் பலியானார். இந்த நிலையில், சிவகாசி ...

இயக்குநர் கே.பாக்யராஜ் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரவசத்தில் பிறந்தவர்கள் எனக் கூறியதற்காக மன்னிப்புக் கோரினார். புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், ”பிரதமர் மோடியை குறை சொல்கிறவர்களை எனக்கு பிடிக்கும். அவரைப் பற்றி குறை சொல்கிறவர்கள் பொதுவாக சொல்வது, மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது தான். அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு யார் உடம்பில் பலம் ...

அமெரிக்காவின் பாலைவனத் தீவில் ‘உலகிலேயே தனிமையான வீடு’ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடம்…அங்கு ஒரு சிறிய வீடு… இயற்கையின் சத்தத்தை ரசித்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். கூட்ட நெரிசலுக்கு மத்தியில் வாழும் நம்மில் பலரும் இந்த ஆசை அடிக்கடி துளிர்விடுவதுண்டு. அந்த ஆசையை நனவாக்க அமெரிக்காவின் ஒரு தீவில் ஒரே ...

2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.. தமிழக அரசு இதுகுறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில். 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2-வது திருமணம் செய்வது தண்டனைக்குரிய ...