உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரை கண்டித்து, உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் அளித்தல் போன்ற உதவிகளை செய்து வருகின்றன. மேலும், இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்க படைகள் நேரடியாக களத்தில் இறங்காது, ஆனால் உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்க அளிக்கும் ...

புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் தபால் துறை ஊழியர் ஒருவர் ரூ.16.59 லட்சம் அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. அவரை பணிநீக்கம் செய்து அஞ்சல் துறை ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் அந்த ஊழியர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அவருக்கு மீண்டும் ...

மின் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல் கன்னியாகுமரி ...

கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் 30 அல்லது 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரித்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் குறித்து வெளியாகியுள்ள சர்வதேச ஆய்வறிக்கைகள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்பு உரையாடல் நிகழ்ச்சி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டது. ...

கீவ் : உக்ரேனியப் படைகளை உடனடியாக ஆயுதங்களைக் கீழே போடுமாறும், முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலின் இருக்கும் சில ராணுவ துருப்புகளும் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுமாறு இறுதி எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 55 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் தலைநகர் கீவ்வை ரஷ்யா கைப்பற்றத் தவறினாலும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் ...

கீவ் : ஐரோப்பிய ஒன்றியம் கூட்டமைப்பில் இணைவதற்கான முதற்கட்ட விண்ணப்பத்தை உக்ரைன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக தங்கள் நாட்டை உறுப்பினராக சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறிய உக்ரைன், அதற்காக முறையாக விண்ணப்பம் செய்து இருந்தது. இந்த நிலையில் நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான விண்ணப்பம் தொடர்பான கேள்வி தாள்களை பூர்த்தி ...

ஆளுநரின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் அரசு செய்து கொள்ளாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன விழாவுக்குச் சென்று, திரும்பும் வழியில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வாகனம் சென்ற பகுதியில், அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடி காட்டினர். தொடர்ந்து, சாலையில் கருப்புக் கொடிகளை ...

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இயக்குநர் பாக்யராஜ், பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டு இருப்பதாகவும், தன் மீதான விமர்சனங்களை பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்து கொள்ளலாம் என்றும் இயக்குநர் பாக்யராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ...

சென்னை : மணலியில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடிகால்கள் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். சென்னை, கொருக்குப்பேட்டையில் மழைநீர் வடிகால், கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. கண்ணண் சாலை, தியாகப்பா தெரு, ஏகாம்பரம் தெருவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொருக்குப்பேட்டை ...

நேற்று தமிழக ஆளுநர் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த போது அரசியல் கட்சி தொண்டர்கள் அவரது கார் மீது கல் மற்றும் கொடி கம்பங்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க இருப்பதாகவும் ...