தமிழகத்தில் 2004ல் சுனாமி பேரலை வந்தது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 7000 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். பெற்றோர்கள் பலர் தமது குழந்தைகளை இழந்தனர். 99 குழந்தைகளும் பெற்றோரை இழந்தன. இந்த குழந்தைகளை பலர் தத்தெடுத்து கொண்டனர். அப்படி சுனாமி பேரலையில் பெற்றோரை இழந்த 9 மாத மற்றும் ...

கமுதி பேரூராட்சியில் உள்ள 11 வார்டுகளில் போட்டி இன்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளும் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வகைகள் உள்ளன. இந்த 15 வார்டுகளில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ...

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரம் ரத்து செய்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுதித்தியுள்ளது. கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. இங்கு ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வார ...

கூகுள் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் லோகோவை மாற்றியதை அடுத்து இப்போது மீண்டும் மாற்றியுள்ளது. இணைய தேடுபொறிகளில் முதன்மையான இடத்தை பெற்றிருப்பது கூகுள் க்ரோம் நிறுவனம். கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் லோகோவைக் கடைசியாக மாற்றியது. அதற்குப் பிறகு இப்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் லோகோவை மாற்றியுள்ளது. ஆனால் பழைய ...

மக்களைத் தேடி வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்துவந்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேரடி பிரச்சாரத்தை கைவிட்டு ஆன்லைன் வழியாக பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.   முதல்வர் ஸ்டாலின் ஏன் நேரடி பிரச்சாரத்தை கைவிட்டு இந்த ஆன்லைன் பிரச்சாரத்தை தேர்ந்தெடுத்தார் என்பது ...

இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது காங்கிரஸூக்கு தெரியும் என ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று பேசினார். பேச்சின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் முன்னாள் ...

டெல்லியைச் சேர்ந்த ராகேஷ் கத்ரி என்பவர் இதுவரை இரண்டரை லட்சம் பறவை கூடுகளைக் கட்டி சாதனையாளராக இடம் பெற்றுள்ளார். இயற்கை வளங்கள், காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுவாழ் உயிரினங்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மனிதர்கள் பல ஆபத்துக்களை சந்திப்பதும் நடக்கிறது. பூமியில் இவ்வளவு அழிவுகள் நடந்தாலும் இயற்கையின் மீதும், பறவை விலங்கினங்கள் ...

திருவனந்தபுரம்: ராஜநாகம் கடித்து கோமா நிலைக்கு சென்ற வாவா சுரேஷ் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். தான் இறக்கும் வரை பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக காடுகளில் விடும் பணியை செய்வேன் என தெரிவித்துள்ளார். பல்லுயிர் சமன்பாட்டுக்கு பாம்புகள் மிகவும் அவசியம் என்பதை அறிந்த மக்கள் தற்போது பாம்புகளை கண்டவுடன் அடித்துக் கொல்லாமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் ...

போபால் : மத்திய பிரதேச அரசுக்கு சொந்தமான விமானத்தை தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாக்கியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விமானியின் லைசென்சும் முடக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசு 2019 ஆம் ஆண்டு 65 கோடி ரூபாய் மதிப்புள்ள பீச்கிராப்ட் ஏர் கிங் என்ற 7 இருக்கைகள் ...

மோசமான வானிலை காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரப் பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தோதல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மாா்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ...