திருவனந்தபுரம்: ராஜநாகம் கடித்து கோமா நிலைக்கு சென்ற வாவா சுரேஷ் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். தான் இறக்கும் வரை பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக காடுகளில் விடும் பணியை செய்வேன் என தெரிவித்துள்ளார். பல்லுயிர் சமன்பாட்டுக்கு பாம்புகள் மிகவும் அவசியம் என்பதை அறிந்த மக்கள் தற்போது பாம்புகளை கண்டவுடன் அடித்துக் கொல்லாமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் ...

போபால் : மத்திய பிரதேச அரசுக்கு சொந்தமான விமானத்தை தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாக்கியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விமானியின் லைசென்சும் முடக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசு 2019 ஆம் ஆண்டு 65 கோடி ரூபாய் மதிப்புள்ள பீச்கிராப்ட் ஏர் கிங் என்ற 7 இருக்கைகள் ...

மோசமான வானிலை காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரப் பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தோதல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மாா்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ...

சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சாதனையைச் சொல்வோம்; களத்தை வெல்வோம் என்ற வார்த்தைக்கேற்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், நல்லாட்சி வழங்கி வரும் தி.மு.கழக ...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதாக ‘நீட்’ தேர்வு இருக்கிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கி 10-க்கும் மேற்பட்ட ...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ...

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில் இன்று (பிப்.7) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று (பிப்.7) இறுதி வாக்காளர் பட்டியல் ...

லூதியானா: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அறிவித்தார். அதேநேரத்தில் சரண்ஜித்சிங் சன்னியைத்தான் பஞ்சாப் மக்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புகிறார்கள்; ஒரு தலைவர் என்பவர் 10-15 நாளில் உருவாகக் கூடியவர் அல்ல என மறைமுகமாக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு ...

வேலூர் மாநகராட்சியில், பாமக சார்பில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரை திமுக மாவட்ட செயலாளர் பரசுராமன் கடத்தி சென்றுள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் திமுகவினர் குறுக்கு வழியில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற ...

மறைந்த அரசு பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் மறைந்த அரசு பணியாளர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ...