கோவை : போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் ராமர் ஆகியோர் போத்தனூர் 4-ம் நம்பர் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 3000 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சூழல் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 29.03.2025 சனிக்கிழமையன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் இந்நிலையில் ஏற்கனவே வால்பாறை வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகிய இரு சங்கத்தினரும் ஒரு நாள் கடையடைப்பு ...

கோவை மாநகர போலீசாருக்கு கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் போதை பொருட்கள் விற்பனை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி கண்காணித்து வந்தனர். அப்போது போதைப் பொருள் விற்பனையில் ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மேட்டுப்பாளையம் உட்கோட்டங்களின் துணை ...

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 -ஆம் ஆண்டில் காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த ...

சென்னை: பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருவதாக பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ. மரகதம் குமாரவேல் பேசும்போது, ”பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். அதற்கு ...

தமிழகத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் திருக்கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ” திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி ...

மாநிலங்களவையில் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இது சட்டமாக்கப்பட்டதும், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் டெபாசிட்களில் வாடிக்கையாளர்கள் 4 நாமினிகளை நியமிக்க அனுமதிக்கப்படும். மேலும், தணிக்கையாளர்களின் ஊதியத்தை தீர்மானிக்க கடன் வழங்குநர்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்குகிறது. மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் ...

மக்கள் பிரச்சினைகளுக்காகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி மாறும் என்றார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணியே கிடையாது என திட்டவட்டமாக கூறிவந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச் 4ஆம் தேதி கூட்டணி குறித்து 6 மாதங்கள் பின்பு ...

இலங்கைக்கு ஏப்ரல் 5-ம் தேதி ஒருநாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேராக ராமேஸ்வரம் வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ராம நவமியை ஒட்டி, ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, பாம்பன் பாலத்தை 6-ம் தேதி திறந்துவைக்க உள்ளதாக ...