சென்னை: பி.எட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட் ...

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேரவிருக்கிறார். இதற்காக, அவர் இன்று சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நிலையில் அண்ணாமலை இன்று லண்டன் புறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் ...

சென்னை: பாஜகவுடன் சமரசம் செய்துகொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுகவும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பாஜகவும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ...

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்ற நிலையில் அவர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துபாயில் தரையிறங்கிய விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னை ...

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது . இந்த நிதி தாமதம் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற கல்வி ஏற்பாடுகளை பாதி த்துள்ளது. திட்ட ஒப்புதல் வாரியம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் ...

பெலகாவி : ”பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், முதல்வராகக் கூடாது, ஆட்சியில் இருக்கக் கூடாது என்பது, பா.ஜ.,வின் சித்தாந்தம். அக்கட்சியினர் தந்திரம் பலிக்காது,” என, முதல்வர் சித்தராமையா பேசினார்.பெலகாவி, கோகாக்கின், கவுஜலகி கிராமத்தில் சங்கொல்லி ராயண்ணா உருவச்சிலையை, முதல்வர் சித்தராமையா நேற்று திறந்து வைத்து பேசியதாவது:சுதந்திரப் போராட்ட வீரர் சங்கொல்லி ராயண்ணா, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவர் ...

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை நமீதாவின் மனம் புண்படும்படி, சட்டத்திற்குப் புறம்பாக ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். நமீதா வருத்தப்பட வேண்டாம்; மதுரை சம்பவத்திற்காக அவர் பெரிதளவு வருத்தப்படுவதாக இருந்தால் நாங்களும் அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ...

அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா 2016ல் மறைந்த நிலையில், 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அ.தி.மு.க இடம் பெற்றது. இதன்பிறகு நடந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடர்ந்தது. ஆனால், தமிழக பா.ஜ.க தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் ...

திமுக மூத்த முன்னொடிகளில் ஒருவரும் மூத்த அமைச்சருமான கட்சிக்கு விசுவாசமான அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவியை திமுக அரசு கொடுக்கலாம் பொருளாதார வலிமை இல்லாத நிலையில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக படையைப் பெருக்கி கட்சியை மேலும் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 100 வாக்காளருக்கு ஒரு குழு வீதம் தேர்தல் பணியை பிரித்துச் ...

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக தி.மு.க.சார்பில் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியனாக உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு என்று தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டுவதற்காக பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்களை ...