சென்னை: பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருவதாக பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ. மரகதம் குமாரவேல் பேசும்போது, ”பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். அதற்கு ...

மாநிலங்களவையில் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இது சட்டமாக்கப்பட்டதும், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் டெபாசிட்களில் வாடிக்கையாளர்கள் 4 நாமினிகளை நியமிக்க அனுமதிக்கப்படும். மேலும், தணிக்கையாளர்களின் ஊதியத்தை தீர்மானிக்க கடன் வழங்குநர்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்குகிறது. மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் ...

மக்கள் பிரச்சினைகளுக்காகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி மாறும் என்றார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணியே கிடையாது என திட்டவட்டமாக கூறிவந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச் 4ஆம் தேதி கூட்டணி குறித்து 6 மாதங்கள் பின்பு ...

இலங்கைக்கு ஏப்ரல் 5-ம் தேதி ஒருநாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேராக ராமேஸ்வரம் வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ராம நவமியை ஒட்டி, ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, பாம்பன் பாலத்தை 6-ம் தேதி திறந்துவைக்க உள்ளதாக ...

நேற்று அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பைத் தொடர்ந்து இன்று  வியாழக்கிழமை டெல்லி செல்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து அண்ணாமலையிடம் அமித் ஷா விவரிக்க உள்ளதாகவும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்த முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. பாஜகவுடன் கூட்டு சேர்வதில் மற்றவைகளை விட, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை ...

இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரில் வழங்கப்படுகிற சொத்துகளை நிர்வகிக்க கூடியது வக்ஃபு வாரியம். இந்த வக்பு வாரியத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், வக்ஃபு கவுன்சில் என்ற அமைப்பில் பொதுவாக அனைவரும் முஸ்லிம்களாகவே இருப்பர். ஆனால் மத்திய அரசின் புதிய மசோதாவில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர் 2 பேரும் ...

திருச்சி மாநகராட்சியில் 2025- 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கோ கு.அம்பிகாபதி, சி .அரவிந்தன் அனுசியா ரவிசங்கர் ஆகியோர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் . பின்னர் 65 வது வார்டு கவுன்சிலர் , மாநகராட்சி அதிமுக குழுத்தலைவர் கோ.கு. அம்பிகாபதி, கவுன்சிலர் சி. அரவிந்தன் ஆகியோர் ...

தமிழக முதல்வரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி இணைந்து மாபெரும் சதுரங்கப்போட்டி தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று ...

இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் மாதம் தற்போது நடைபெற்று வருவதால் ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஆங்காங்கே உள்ள மசூதிகளில் அரசியல் கட்சியினரும் தன்னார்வ அமைப்புகளும் இப்தார் விருந்து வைத்து வருகிறார்கள். இந்த நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், கஸ்டம்ஸ் சாலை அருகில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கஸ்டம்ஸ் ...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்ய நிதியியல் மசோதாவில் 35 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த 35 மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரம், ஏற்றுமதி, வர்த்தகம் ஆகியவற்றில் பெரிய அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றால் மிகையில்லை.செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில் கொண்டுவரப்பட்ட 35 திருத்தங்கள் சுங்க வரிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் ...