சமூக நீதி போராளி, சமூகநீதி காவலர், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர்  முக ஸ்டாலின் வாழ்த்து: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஐயா அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ ...

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களைப் புறக்கணித்ததைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளிலும் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். இதில் திமுக எம்பிக்கள் ...

தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு திருச்சியில் உள்ள சிறுகனூரில் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ...

சென்னை: காலி மது பாட்டில்களை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான டெண்டரை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உயர்நீதிமன்ற ஆணைப்படி, டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை டெண்டர் விட்டு திரும்பப் பெற வேண்டும்; அதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். உயர்நீதிமன்ற ஆணைப்படி நீலகிரி, திண்டுக்கல், ...

வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க முன்வரவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வணிகர்கள் நலனுக்காக ‘வணிகர்கள் நலவாரியம்’அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாரியத்தின் முதல் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மேலும் ...

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிலும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகள், ...

திருச்சியில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கவிஞர் கவிப்பேரசுவைரமுத்து தொடங்கி வைத்தார் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை முக்கோணத்தில் தமிழக அரசை கண்டித்தும் இந்து ஆலயங்களில் இருந்து அரசின் அறநிலையத்துறையை வெளியேற வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொருந்திய பதாகைகளை கையிலேந்தியவாறு இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் வால்பாறை ஏ.எஸ்.டி.சேகர் தலைமையில் கோவை மாவட்ட கோட்டச் செயலாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நேற்று ஆர்ப்பாட்டம் ...

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று 16வது நாள் காரியம் நடைபெறுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழியாக அவரது 16வது நாள் காரியத்தன்று கொலை செய்ய உள்ளதாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சபதம் எடுத்திருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. இதையடுத்து ...

 என்னை கொல்ல சதி நடக்கிறது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி அலுவலகத்தில்அசதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் பேசியதாவது: முஸ்லிம்கள் மீது மத்திய அரசு தனது ஓரவஞ்சனையை வெளிப்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீதும் தனது அரசியல் காழ்புணர்வால் ...