வாஷிங்டன் :உலகமே விரும்பும் நபராக உள்ள பிரதமர் மோடியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற ட்ரம்பிற்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதனை கேட்ட ட்ரம்ப், பிரதமர் மோடி மற்றும் ...
பெங்களூர்: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, முடா வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா காவல்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீசார் 2 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சித்தராமையாவிடம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. முடா என்பது மைசூர் நகர்ப்புற ...
புதுடெல்லி: நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். One Rank One Pension (OROP) திட்டம் அமலாக்கப்பட்டதன் 10வது ஆண்டை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இதே நாளில்தான் One Rank One Pension (OROP) திட்டம் அமல்படுத்தப்பட்டது. நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் ...
அதிமுக பொதுக்குழு தொடர்பான பிரதான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022 ம் ஆண்டு உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த ...
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சிறப்பு அந்தஸ்து கோரிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.அண்மையில் நடந்த ...
வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, பாமகவில் தொண்டராக இருக்கிறார். இவர் நவம்பர் 1ம் தேதி பு.உடையூர் கிராமத்தின் வழியாக சென்ற போது அங்கிருந்த 15 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படுகிறார். மேலும் அக் ...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற நிலையில், உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 6.11.2024 ...
கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கொக்கரித்துள்ளனர் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் ...
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோவை மாவட்டத்தின் தேவைகளான பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கினார் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். மெட்ரோ ரயில் திட்டம் தாமதமாவது ஏன் என வானதி சுட்டிக்காட்டினார். கோவையின் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2 முக்கிய அறிக்கைகளை தமிழக அரசு வழங்க வேண்டியது உள்ளது. மாநில ...