சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தற்போதும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து ...

சென்னை: தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சபைக்கு வர அனுமதி இல்லை என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்ததனால் மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வர அனுமதி கொடுத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் செய்யப்பட்ட பிறகு ...

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பதற்றமான நிலை நீடிக்கிறது. இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்ட்ம இன்று காலை தொடங்கியது, கேள்வி நேரத்தின் ஆரம்பிக்கும் போதே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்சனையை எழுப்பினர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினார். ...

சென்னை: ‘தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள ...

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், கடந்தாண்டு மே மாதம் விழுப்புரத்தில் கள்ளச் சாராயத்தால் 23 பேர் உயிரிழந்தனர். இந்த ...

திமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. இவர் திமுகவில் பயணித்து வந்தார். திமுகவில் இருந்தவரை கனிமொழி எம்பியின் ஆதரவாளராக அறியப்பட்டார். அதன்பிறகு அவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து கொண்டார். பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக உள்ளார். அதோடு பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில ...

உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வசிக்கும் அகதிகளை அந்நாட்டவர்களை மணந்திருந்தால், நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என அதிபா் ஜோ பைடன் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான அகதிகள் அந்த நாட்டில் உள்ளவரை மணந்திருந்தால் அவா்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் திட்டத்தை அதிபா் ஜோ பைடன் வகுத்துள்ளாா். இது குறித்து ...

ராமநாதபுரம் : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இரவு ராமநாதபுரத்திற்கு வருகிறார். நாளை மறுநாள் (ஜூன் 21) உலக யோகா தினம் நடைபெறுவதையொட்டி தனுஷ்கோடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, உச்சிப்புளி INS பருந்து கடற்படை தளத்திற்கு வருகிறார். சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ல் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல ...

அண்மையில் நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி களம் கண்டாா். இரு தொகுதிகளில் வென்ற ராகுல், தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதியிலிருந்து 14 நாள்களுக்குள்(ஜூன் 18) ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியது கட்டாயம். ...

சென்னை: ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் தவெக போட்டியிடாது’ என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத் தலைவர், விஜய் ...