மாநிலங்களவையில் 1990 பிறகு 101 உறுப்பினர்களை கடந்த ஒரே கட்சி இது தான்… புது மைல்கல்லை எட்டிய பாஜக.!!
பஞ்சாப், அசாம், திரிபுரா, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட6 மாநிலங்களில் காலியாகும் 13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், நாகாலாந்து, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு உறுப்பினர் பதவியை போட்டியின்றி பாஜக கைப்பற்றியது. அசாமில் 2 உறுப்பினர், திரிபுராவில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றது. இதனால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100 ...
தமிழகத்தில் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வானது உடனடியாக அமலுக்கு வருகிறது. அதாவது, தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் 600 சதுர ...
அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்துவரி குறைவு எனவும் விளக்கமளித்துள்ளது. சொத்து வரி உயர்வால் அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கும் ...
டெல்லி: உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின் பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உக்ரைனின் தற்போதைய நிலை குறித்து பிரதமரிடம் ரஷ்ய அமைச்சர் விவரித்ததாக ...
சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளதை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்க, மத்திய அரசின் 15வது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. இதன் காரணமாக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழக முடிவெடுத்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% ...
நேற்றிரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர். இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். கண்ணீர் புகை குண்டு வீச்சால் ஏற்பட்ட புகையில் கண் எரிச்சல் மற்றும் பிற பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ...
தமிழகத்தில் பேருந்து சேவை வழங்கப்படாத கிராமங்களை கண்டறிந்து விரைவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் புதன்கிழமை பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சென்னையில் தேவைக்கேற்ப சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ...
புதுடெல்லி: 4 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்துக்கான ரூ.20,860.40 கோடியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணரான் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளமான ட்விட்டரில் மத மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருத்து பதிவிட்டதாக கல்யாணரான் மீது குண்டாஸ் போடப்பட்டிருந்தது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய ...
தலைநகர் டெல்லியில் தி.மு.க அலுவலக திறப்பு விழாவுக்காகவும், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் பலரை சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசுப் பள்ளிகளை அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவாலுடன் ...