டெல்லி: உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக இந்தியா திகழ்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை, குஜராத்தில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், அதன் இடைக்கால அலுவலகத்துடன் நிறுவுவதற்கான உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ...

பாஜகவின் வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வரவேற்பதாக தெரிவித்தார். ஆனால் மற்றொரு கருத்தையும் அவர் திமுகவினருக்கு கூறியுள்ளார். புதுச்சேரியில் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேசிய அளவிலான மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் ...

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தர்மபுரி தொகுதி வேட்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். அப்போது, பிரச்சாரத்தின் இறுதி நாளன்று தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தியதாக அன்புமணி ...

சண்டிகர்: பஞ்சாபில் பல முறை எம்எல்ஏ.,வாக இருந்தவர்களுக்கு இனி ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான பென்சனை (ஓய்வூதியம்) மட்டுமே வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.பஞ்சாபில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அக்கட்சியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் வெளியிட்ட ...

மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில், தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.3.2022) துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் (Dubai International Financial Centre) ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின்டூக் அல் மர்ரியையும், (H.E. Abdulla Bin ...

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடன் சென்றிருப்பவர்கள் துபாயில் எங்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூகுள் மூலம் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு நன்கு தெரியும் என்றும், ஸ்டாலின் துபாய் விவரம் குறித்த அனைத்து பைல்களையும் ஆளுநர் ...

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய் உலக பொருட்காட்சியினல் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கைத் திறந்து வைக்க உள்ளார் நேற்று மாலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் அங்கு சென்றடைந்தார். முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் ...

துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாட்டு அரங்கை இன்று திறந்து வைக்கவுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள, நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு ...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இன்று பதவியேற்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 50 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். உத்தர பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக கூட்டணி 273 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. முதல்வர் ...

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வட்டார தலைவர் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதி யில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் ...