உத்தர பிரதேசம் வாரணாசியை சேர்ந்த சுவாமி சிவானந்தாவுக்கு 126 வயதாகிறது. யோகா குருவான அவர் இந்த வயதிலும் நாள்தோறும் யோகாசனம் செய்து வருகிறார்.அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. விருதை பெறுவதற்காக, சுவாமி சிவானந்தா யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நடந்து வந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை பார்த்ததும், அவருக்கு முன்பாக தரையில் ...

சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள விநாயகர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியது: தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறாத, குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோயில்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு ...

புதுடெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்வினையாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. அதையடுத்து, பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து கச்சா ...

கொழும்பு ; இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி இரட்டிப்பாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு கோப்பை தேநீரின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பை அரசு சமீபத்தில் வெகுவாக குறைத்தது. இதனால் ஏற்றுமதி, சுற்றுலா துறை பாதித்தது. இதன் காரணமாக அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கியது. இதனால், அங்கு கடும் ...

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார். கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் ...

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் ஜம்மு-காஷ்மீரின் ஒவ்வொரு குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்று ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை மேற்கோள்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் கூறினாா். அதே நேரம், ‘பயங்கரவாதத்துடன் குறிப்பிட்ட மதத்தை மட்டும் தொடா்புபடுத்துவது முற்றிலும் தவறானது’ என்றும் அவா் கூறினாா். கடந்த 1990-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரிலிருந்து காஷ்மீா் பண்டிட்டுகள் முழுமையாக வெளியேற ...

இஸ்லாமாபாத் :பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்தது எனவும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களுக்கானது என பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து ...

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஜானகிராமன், கருப்பண்ண உடையார், மாரப்பன், ரசாக், வேழவேந்தன் ஆகியோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறுகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன் வகையில்; பூம்புகார் தொகுதி உப்பனாற்றின் குறுக்கே அணை கட்டப்படுமா? ...

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் இன்று (மார்ச் 21) நேரில் ஆஜராகினர். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ...

தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால் கோயில் நிலங்களை மீட்க இந்து முன்னணி உதவும் என மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்து முன்னணியின் கோவை கோட்ட பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் நீண்ட ...