சென்னை: சென்னை உள்ளிட்ட 4 உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தியது, பழுது காரணமாக 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 268 மையங்களில் எண்ணப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் ...

கோவை: வாக்குச்சாவடி விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்காரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை அறிந்துகொள்ள www.ccmc.gov.in மற்றும் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு காண பிரதான வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் “பிரஸ் கவுன்சில்” அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் வருகின்ற பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும்,அங்கீகார ...

கோவை: ”இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசியல் ரொம்ப ‘காஸ்ட்லி’யாக இருக்கிறது. எல்லாவற்றிலும் பணம் விளையாடுகிறது,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் உள்ளாட்சி தேர்தல் இறுதி நாள் பிரசாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:இந்த தேர்தலில் தி.மு.க., 2,000 ரூபாய் பணம், ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு, ஒரு ‘ஹாட்பாக்ஸ்’ ஆகியவற்றை கொடுத்து உள்ளாட்சியை பிடித்து ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நேற்று காலை 10 மணி முதல், வரும் 19-ம் தேதி ...

முதல்வர் மு.க.ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை “உங்களில் ஒருவன்” என்ற சுயசரிதை புத்தகமாக வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். முதல் பாகமாக ...

மத்திய அரசு 5 மாநிலங்களில் 60,000- க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் அனைவருக்கும் சொந்த வீட்டினை அரசு நிதியுதவி மூலம் வழங்குவதை, மோடி தலைமையிலான அரசு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ...

புதுடில்லி: நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம் எனக்கூறி இத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. ...

சென்னை: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் விடியவிடிய தேர்தல் பறக்கும் படையினருடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்களும் வெளியேற்றப்பட்டனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள ...

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன், இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மேயர் என்ற பெருமை பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இவருக்கு தற்போது 23 வயது ஆகிறது. கல்லூரி மாணவியான இவர், மேயராக பதவி ஏற்ற தகவல் நாடு முழுவதும் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில், மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும், பாலுச்சேரி தொகுதி எம்எல்ஏவான கேஎம் ...