இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பொய்யை சுக்குநூறாக உடைத்து விட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அவர் மக்களிடம் காணொளி வாயிலாக பேசினார். அந்தக் காணொளியை டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆனது. நாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த ...

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்திக்கு பதிலாக அவரது இளைய சகோதரியானப் பிரியங்கா வதேரா முன்னிறுத்தப்படுவதாகத் தெரிகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைக்கும் பலனை பொறுத்து கட்சி தலைமை இறுதி முடிவு எடுக்க உள்ளது. கடந்த இரண்டு வருடமாக தேசியத் தலைவர் பதவிக்கு 51 வயதான ராகுல் காந்தியின் பெயர் பேசப்பட்டு ...

மதுரையில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து, சட்டமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் நேற்றைய தினம் ஓபுளா படித்துறை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகம் முழுவதும் கடந்த எட்டு நாள்களாகப் பிரசாரம் செய்துவருகிறேன், தி.மு.க-வுக்கு சட்டமன்றத் தேர்தலை போன்று உள்ளாட்சித் ...

புதுடில்லி : ‘வேலுார் சி.எம்.சி., கல்லுாரி முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், 70 சதவீதத்தை, ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் தமிழக அரசு அளிக்கும் பட்டியலில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுார் சி.எம்.சி., கல்லுாரி நிர்வாகம், 2021-22ம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழக அரசு அளித்த ...

தஞ்சாவூரில் திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியது மட்டுமின்றி அவரிடம் இருந்து சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி சொந்தமான சுதர்சன சபா அமைந்துள்ளது. இந்த சபாவில் ஆன்மிக சொற்பொழிவு, புத்தக வெளியீடு உள்ளிட்டவை நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ...

டாஸ்மாக் சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் செய்யப்பட்ட உள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு, திறந்த கடையை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு அல்லது கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினால், அதை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்யும் வகையில், மதுபான சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் செய்யப்பட ...

சென்னை: 45வது புத்தகக் கண்காட்சி பிப்ரவரி16ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி, கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, பிப்ரவரி 16 ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 3 வரை 16 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியான காலை 11 மணிமுதல் இரவு 8 ...

நாடாளுமன்றத்தில் யூடியூப் சேனலான சன்சத் டிவி, இன்று அதிகாலை முடக்கப்பட்டு சிறிது நேரத்தில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நிகழ்வுகளை நேரலை செய்வதற்காக சன்சத் டிவி என்ற யூடியூப் சேனல் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத நாள்களில் அரசு சார்ந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சன்சத் டிவி வெளியிட்டுள்ள செய்திக் ...

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் தண்டிக்கப்பட்ட தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தற்போது மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். தோரணாடா கருவூலத்திலிருந்து 139 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு ...

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலக்காலத்தில் அனைத்து வகையான பொது நடவடிக்கைகளுக்கும் தடை செய்யப்பட்டது. ஆனால் நடுவில் கொரோனா தொற்று ...