ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சிறப்பு அந்தஸ்து கோரிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.அண்மையில் நடந்த ...
வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, பாமகவில் தொண்டராக இருக்கிறார். இவர் நவம்பர் 1ம் தேதி பு.உடையூர் கிராமத்தின் வழியாக சென்ற போது அங்கிருந்த 15 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படுகிறார். மேலும் அக் ...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற நிலையில், உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 6.11.2024 ...
கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கொக்கரித்துள்ளனர் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் ...
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோவை மாவட்டத்தின் தேவைகளான பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கினார் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். மெட்ரோ ரயில் திட்டம் தாமதமாவது ஏன் என வானதி சுட்டிக்காட்டினார். கோவையின் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2 முக்கிய அறிக்கைகளை தமிழக அரசு வழங்க வேண்டியது உள்ளது. மாநில ...
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் தமிழக முதலமைச்சர மு.க.ஸ்டாலின் கோவை வந்தடைந்தார். முதல் நிகழ்ச்சியாக எல்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட அவர், தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நில எடுப்பு விடுப்பு ஆணைகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து நேற்று ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அமெரிக்காவில் 47-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், ...
கோவை, இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் காலை உணவு திட்டப் பயனாளிகளான மாணவர்களுடன் உணவு தரம் எவ்வாறு உள்ளது என்றும், உணவு குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளியில் உணவு தயாரிக்கும் ஊழியர்களிடம் உணவு குறித்தும் ...
விளாங்குறிச்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள புது தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைப்பதற்காக கோவை வந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நேரில் சந்தித்து வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து வழி நெடுக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாநகரில் வருகிற ...