கோவை நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்தில் மனு கோவை மாவட்டத்தில் மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். கோவையில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 64.81%, தமிழகத்தில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம்: 69.46%. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 19, 2024 அன்று (வாக்களிப்பு ...

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது ரயிலில் ...

கொடைக்கானல்: தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது. அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி இங்கு வரும் நிலையில், அவர் குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ...

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி தஞ்சாவூர் கரூர் அரியலூர் பேரூராட்சி ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர் அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் ...

வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது. பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவு. கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்து ...

சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும், வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ...

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். மேலும் வேட்பாளர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு ...

புதுதில்லி: மக்களவைக்கான 2 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதோடு, அதிக வாக்குப்பதிவு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி ...

கோவை செட்டி வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நரேஷ் குமார் (வயது 30 ) இவர் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ. இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று இரவு மாதம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்ற போது 2 சிறுவர்கள் ஓட்டி வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது ...

கோவிலின் தங்க நகைகளை திருடி போலி நகைகள் வைத்த அர்ச்சகர் கோவையில் கைது!!! கோவை, மருதமலை சுப்பிரமணி சுவாமி தேவஸ்தான கோயிலின் உபகோயிலான, வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயிலில், தங்க நகை சுமார் 14 கிராம் எடுத்து அதை உருக்கி விற்பனை செய்து விட்டு, அதற்கு பதிலாக போலி நகையை வைத்ததாக கோயில் பூசாரி கைது. ...