நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தக் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மண்டல பொறுப்பாளருமான இப்ராஹீம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் பணம் தற்போது திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.135 கோடியை சட்ட விரோதமாக ...

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக போட்டியிடும் கருப்பையாவிற்கு கூட்டணி கட்சியான தேசிய திராவிட முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் பிரேமலதா திருச்சி மரக்கடை பகுதியில்  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது இந்த தேர்தலில் வெற்றி வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தர வேண்டும். நமது வேட்பாளர் ...

இந்த 10 வருடங்களில் நீங்கள் பார்த்தது ட்ரெய்லரை மட்டுமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு உத்தரபிரதேசத்தின் மீரட்டில் இருந்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது பேரணியில் உரையாற்றிய மோடி, ‘ இந்தியா’ கூட்டணி ஊழல் செய்வதாகவும், ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், ‘எவ்வளவு பெரிய ...

விழுப்புரம்: ஆட்சி பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து வன்முறையை தூண்டிவிட்டு திமுக வெற்றி பெற நினைக்கிறது என விழுப்புரம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக. வேட்பாளர் பாக்யராஜ், கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுரு, ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து தே.மு.தி.க. சார்பில் தேர்தல் ...

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் பிஜேபி கட்சியின் சார்பில் மகளிர் பிரதிநிதிகள் கூட்டம் வானதி சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் பேசுகையில், ‘பெண்களுக்கு உண்டான மரியாதையை கொடுக்கும் கட்சி பிஜேபி கட்சி தான் என நரேந்திர மோடி சொல்லி ...

திருச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திருநாவுக்கரசர் முயற்சி செய்த வேளையில் அது கிடைக்காமல் போனது இதனையடுத்து மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக அந்த தொகுதியும் ஒதுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் திருநாவுகரசர் இருந்து வந்தார். இந்த நிலையில் திருச்சி தொகுதி மக்களுக்கு தனது எம்பி பதவி காலத்தில் ...

திருச்சி நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி தென்னூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: திமுக அளித்த 513 வாக்குறுதிகளில் 20-ஐ கூட ...

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி, மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்த அவர், தனக்கு அத்தொகுதி பாஜகவில் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு பதிலாக கார்த்திகாயினி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் கடும் அதிருப்தி அடைந்த ...

தருமபுரி: சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பாஜக.வுடன் கூட்டணி வைத்தது ஏன்..? என்று தருமபுரியில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் ‘இண்டியா’ கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.மணி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ...