புதுடெல்லி: பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளதாகவும், புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்க உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். புத்தரின் போதனைகளை கொண்டாடும் சர்வதேச அபிதம்மம் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:- பழமையான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகிற்கு ...
திருச்சியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்ததில் உதவி ஆய்வாளர் பார்வை பாதிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலாளர் உட்பட 20 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவுநடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான ...
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘அதிமுக ஆட்சியில் பல புயல்கள் வந்தன. அப்போது புயல் வேகத்தில் பணியாற்றி மக்களின் பிரச்னைகளை தீர்த்தோம். பிரிந்து கிடக்கின்ற என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவ்வளவுதான். 6 முக்கிய தலைவர்கள் ...
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்ததால் பெரும்பாலான மக்கள் தமிழ்நாடு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்றும் நாளையும் சென்னை முழுவதும் இருக்கக்கூடிய அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழை காலத்தில் சென்னை ...
ஸ்ரீநகர்: காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்கிறார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டும் கூட காங்கிரஸ் அதனைப் புறக்கணித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்றைய பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ...
சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் ...
தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று காலையில் விமானம் மூலம் கோவை வந்தார் . விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட வார்டு எண்:61,கள்ளிமடை கதிரவன் கார்டன் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார். அவருடன் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ...
திருச்சி மாவட்டம் புலிவலம் கரட்டாம்பட்டியில் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு அனுமதியோடு மதுராபுரியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் டிஎஸ்கே என்ற பெயரில் கல்குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து இந்த கல்குவாரியை அவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி ...
சேலம்: பருவ கால நோய்களைக் தடுக்க தமிழகம் முழுவதும் நாளை ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகள் துவக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதன்படி சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் ...
சென்னை: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், 15.10.2024 முதல் 17.10.2024 வரை சென்னை மற்றும் ...