மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று ...

கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4 -ம் அணி சார்பில் கோவையில் உள்ள ஆதரவற்ற அன்பு இல்ல மாணவ- மாணவிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. இந்த விளையாட்டுப் போட்டியினை 4-வது அணி கமாண்டன்ட் செந்தில்குமார் தொடக்கி வைத்தார். விளையாட்டு போட்டிகள் காலை தொடங்கி மாலை வரை நடந்தது. விளையாட்டு போட்டிகளில் ...

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று  தொடங்கியது . இந்த போட்டிகளை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். என்னதான் மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேமஸாக இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்த அளவில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில்தான் தொடங்கும். அதேபோல மற்ற மாவட்டங்களை விட இங்குதான் ...

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் மிக முக்கியமானவைகளாக, ஜல்லிக்கட்டு காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் ...

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாகவும் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ...

கோவை கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா : வருகிற 7, 8 ம் தேதி நடக்கிறது கோவையில் முதல் முறையாக வரும் 7, 8 – ம் தேதிகளில் கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து செட்டிநாடு திருவிழா ஒருங்கிணைப்பாளர் முத்துராமன், தலைவர் ராமு மற்றும் லட்சுமி செராமிக்ஸ் முத்துராமன் ஆகியோர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- ...

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.15.60 கோடி மதிப்பிலான ஜிம்னாசியம், செயற்கை இழை ஓடுதளம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்றுதிறந்து வைத்தார். மின்துறையில் 101 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் அப்போது அவர் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் ...

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகள் 3.11.2022 மற்றும் 11.11.2022 ஆகிய தினங்களில் பெய்த மிக பலத்த மழையினால் பயிர்கள் பெரிதும் ...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 82. தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. பின்னர் கடந்த 2021ம் ஆண்டு பீலே, புற்றுநோய் பாதிப்புக்காக கீமோதெரபி சிகிச்சை ...

2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அதற்கான அனுமதி கிடைத்தால் குஜராத்தில் பெரும்பாலான போட்டிகள் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பாரிசில் நடக்க இருக்கும் நிலையில் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவிலும் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற ...