திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முன்னாள் மாணவர் இயக்கம், திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்டக்கழகம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி 27.08.23 முதல் 28.08.23 இரண்டு நாட்கள் நடைபெற்றது. எட்டு பள்ளிகள் பங்கேற்ற இப்போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி அணியும், மதுரை புனித மரியன்னை மேனிலைப் பள்ளி அணிகளும் ...
மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாரி சிலம்பம் கலைக்கூடம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி சிலம்ப ஆசான் முத்துமாரி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 40 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியர் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். செங்கம் அடுத்துள்ள மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி கோ-கோ ,கபாடி, த்ரோபால்,ஹேண்ட் ...
பெக்கு: செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்கா வீரர் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அசர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த செஸ் உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சக இந்திய வீரரான தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜூன் ...
சென்னையில் 7 வது ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொள்கின்றன 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த போட்டியானது சென்னையில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி ...
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2023- ஆம் ஆண்டின் கோப்பை அறிமுக விழா கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக 7 -வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2023- ஆம் ஆண்டின் கோப்பையினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புஞ்சைபுளியம்பட்டி ...
கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெத்வ தேவ் (ரஷ்யா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் இன்று நடைபெற்ற இறுதி ...
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த எஸ்.ரோஹித் கிருஷ்ணாவுக்கு ரூ.3 லட்சம், ஸ்பெயின் சாண்டாண்டரில் நடைபெற்ற பி.டபிள்யூ.எஃப். ஜுனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த எஸ்.சங்கர் முத்துசாமிக்கு ரூ.4 லட்சமும், ஆந்திராவில் ...
லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. விம்பிள்டன் போட்டி இன்று தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை லண்டனில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. உலகின் 2-ம் நிலை வீரரும், செர்பியாவைச் சேர்ந்தவருமான நோவக் ஜோகோவிச் இந்த ஆண்டின் முதல் 2 கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்சு ஓபனில் ...
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 2023ம் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023ம் மாதம் முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட ...