சச்சின் டெண்டுல்கர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். அவருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் பல சாதனைகளை செய்ய வைத்துள்ளது. ஆரம்பத்தில் அவர் ஒரு பவுலராக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது தான், அவருக்கு பந்து வீச்சு சரியில்லை என்று கூறி ரமாகாந்த் அச்ரேகர் அவரை பேட்டிங் பயிற்சி எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தான் ...

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் ...

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டனர். அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று(மார்ச் 9) தொடங்கியுள்ளது. இந்த போட்டியை ...

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்தியாவின் பருவநிலைக் கொள்கை நீடித்த வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பை நோக்கியதாக உள்ளது என்றும், அதே நேரத்தில் வளர்ச்சியின் காரணமாக வெளியேறும் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும், துறைகள் முழுவதும் ஆற்றல் திறனை மேம்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுவதாகக் கூறினார். 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இன்னும் ...

கோவை: முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 14-ந் தேதி தேதியில் இருந்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொது பிரிவு, மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் கோவை மாவட்டத்தில் சுமார் 16,000 க்கும் ...

கோவை: முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படவுள்ளன. ...

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. போட்டியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். மொத்தம் 10 சுற்றுகளில் 823 மாடுகள் களமிறங்கின. இதில் 26 காளைகளை அடக்கிய வீரர் அபி சித்தர் முதல் இடத்தைப் பிடித்தார். ஏனாதி அஜய் ...

மதுரையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. தை முதல் நாளான ஜனவரி 15 தேதி தொடங்கி 16, 17 ஆகிய மூன்று நாட்கள் இப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. ...

கடந்த 5 ஆண்டுகளாக, ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் உரிமைகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்தன. டிஜிட்டல் உரிமைகளும் ஹாட்ஸ்டார் வசம் இருந்தது. ஆனால், 2023-ம் ஆண்டு முதல் டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘வியாகாம் 18’ நிறுவனம் கைப்பற்றியது. மொத்தம் ரூ. 20, 500 கோடி கொடுத்து இந்த உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து பெற்றுக்கொண்டது. ...

சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். பெரும்பாலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தென் மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் அதிக அளவில் நடைபெறுவதால் ஏராளமான மக்கள் ஒன்றாகத் திரண்டு போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். பெரும்பாலும் சென்னையைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் ...