கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டுக்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், ...
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி அவரது வழக்கறிஞருடன் ஆஜரானார்.கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில், தமிழக அமைச்சரவையில், தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சரான பொன்முடி கனிம வளங்கள் ...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன்காரணமாக நீண்ட நாட்களாகவே பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டார். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்கும் அவர் தலைமையிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இந்த ...
நீலகிரி மாவட்டம் கக்குச்சி பக்கம் உள்ள குகை பகுதியை சேர்ந்தவர் சுஜித் குமார் ( வயது 34) வேன் டிரைவர். இவர் நேற்று ஜடையம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி ஏற்றிகொண்டு தென்திருப்பதி நால்ரோடு அருகே வேனை நிறுத்தி நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் இவரை மிரட்டி கத்தியால் குத்தி அவரிடம் இருந்த பணம் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள நாகூர், வாழைக் கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் பூவேந்திரன் (வயது 39) விவசாயி இவர் நேற்று தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாட்டை துரத்தி சென்றார். அப்போது சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார் .இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ...
கோவை பேரூரூர் அருகே உள்ள காளம்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.ஆட்டோ டிரைவர். இவர் எட்டி மடையை சேர்ந்த மருது முத்து என்பவரது ஆட்டோவை ஓட்டி வருகிறார்.இந்த ஆட்டோவை பெரிய கடை வீதி கோனியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள மாநகராட்சி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார். அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது ...
கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி தான்யா (வயது 28) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் .பின்னர் ஊட்டியில் வசித்து வந்தனர் இவர்களுக்கு சுவாதி ( வயது 12)காவியா ( வயது 4) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ...
கோவை செல்வபுரம் ஐ.யூ. டி.பி. காலனி, சத்யா நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்,இவரது மனைவி விஜயகுமாரி (வயது 42) நகை தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் ...
கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள வெங்கடரமணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 53)இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரில்” ஆர். ஜே. எக்யூப்மென்ட்ஸ்”என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 26ஆம் தேதி (ஞாயிறு)அன்று தொழில் நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அன்றுதிடீரென்று தீ விபத்து ஏற்பட்டது .இதுகுறித்து கோவை தெற்கு ...
கோவை அருகே உள்ள மருதமலையில்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதபடுகிறது. தினந்தோறும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். பக்தர்கள் பாதுகாப்பு கருதியும் |அவர்களின் உடமைகளை பாதுகாக்கும் பொருட்டு மலைக்கோவிலில் புதிதாக புறக்கவல் நிலை அமைக்க மாநகர ...