மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) தொகுத்த தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இணைய மோசடியால் இந்தியா தோராயமாக ரூ.11,333 கோடியை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2,28,094 புகார்கள் பெறப்பட்ட நிலையில், ரூ.4,636 கோடி இழப்புகளுடன் பங்கு வர்த்தக மோசடிகள் முதன்மையானதாக இருக்கிறது. முதலீட்டு அடிப்படையிலான ...

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் நகர தொடங்கியது. நாகைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவில் மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என ...

கோவையில் வனப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட லோக் அதாலத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கோவை மாவட்ட லோக் அதாலத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த ...

திருச்சியில் நடக்கும் மாவட்ட ஆய்வுக் கூட்டங்களில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை வேண்டும். திருச்சியில் இந்திய மருத்துவ மன்றம் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கம் சார்பில் இந்திய மருத்துவ மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் தாய்சேய் இருவரையும் காப்பாற்றும் மிகப் பொறுப்பில் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும் மகப்பேறு கால இறப்பை குறைப்பதில் நம் மாநிலம் ...

டெல் அவிவ்: காசா போரில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா களம் இறங்கியது. இதற்கு எதிர் தாக்குதல் நடத்த லெபனான் மீதும் போரை அறிவித்தது இஸ்ரேல். இந்நிலையில் இந்த போர் தற்போது நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்காக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அது மீறப்படும்பட்சத்தில் போர் கையை மீறி செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. பாலஸ்தீனத்தின் மீதான ...

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீன்பிடித் தளத்தில் சுமார் 300 படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து தங்களது வாழ்வாரத்தை காத்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து இந்த பகுதியில் பெய்து வரும் கன மழையால் கடந்த 22 ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ...

கோவை : திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக நீலகிரிக்கு இன்று வந்தார் . அவர் இன்று டெல்லியில் இருந்து காலை 6 மணிக்கு விமானம் மூலம் ...

மதுரை: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது. மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த விமானம், மதுரை விமான நிலையம் அருகே உள்ள விராதனூர் மற்றும் திருமங்கலம் பகுதியில் வானில் வட்டமடித்து வந்தது. இதனிடையே வானிலை சரியான நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. ...

தமிழகத்தில் குளிர் காலம் தொடங்கிய உள்ள நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக 75% க்கு அதிக மாணவர்கள் இன்புளூயன்சா என்ற வைரஸ் தொற்று காரணமாக இருக்கிறது. இந்த இன்புளூயன்சா வைரஸ் ஏ ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கரட்டுமேடு பகுதியில் பவானி கதவணை மின்நிலையம் 2 உள்ளது. இங்குள்ள பவானி ஆற்றில் பிறந்த சில மாதங்களேஆன பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய ஊழியர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ ...