கோவை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்தாண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்தது. காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்கொலை தாக்குதல் என காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபினின் ...
தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை: திறமையான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது – கோவையில் நடிகை அமிர்த அய்யர் பேட்டி கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் கார்த்திக் தங்க நகை மாளிகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடையை திறந்து ...
தங்க நாகம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கோவை அடுத்த இருகூர் உதயம் நகரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தங்க நாகம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருக்கோவிலில் தங்க நாகம்மாள், நாக கணபதி, குழு மாயி அம்மன், சேது பகவான், வெற்றி விநாயகர், ராகு கேது சகிதம், பேச்சியம்மாள், வீரமாத்தி அம்மன், ...
கோவை விமான நிலையத்தில் 3.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ரூபாய் 2.19 கோடி மதிப்பிலான 3.73 கிலோ அளவிலான தங்கத்தை உள்ளாடை மற்றும் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது. சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஸ்கூட் விமான ...
சாலையில் செல்லும் நபர்களுக்கு பாலியல் சீண்டல்: பணம் கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகள் கைது பொதுமக்கள் – திருநங்கைகள் இடையே பிரச்சனை ஏற்படாதவாறு இருக்க இனி நாள்தோறும் காவலர்கள் ரோந்து செல்ல திட்டம் கோவை மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் அவ்வப் போது காவல் துறை உயர் அதிகாரிகள் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து ...
பிரபல பாடகி ஜொனிதா காந்தி: இசை நிகழ்ச்சி கோவையில் 26 ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடக்கிறது இந்தியர்களால் கொண்டாடப்படக் கூடிய இளம் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தியின் இசை கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தோ-கனடிய பாடகரான இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ...
கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம். மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது 74) இவர் நேற்று காங்கேயம் பாளையம், மருந்து கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரங்கன் அதே இடத்தில் பலியானார். ...
கோவை: நகரப் பஸ்களில் மாதம் முழுவதும் விருப்பம் போல பயணிக்க ரூ.1,000 செலுத்தி சலுகை கட்டண அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் கோவை கோட்ட மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அனைத்து நகர பஸ்களிலும் ஒரு மாதம் முழுவதும் எங்கும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கி ...
திண்டுக்கல்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தை கொடைக்கானலில் இன்று முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்ககலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சி கூடம் தெரிவித்துள்ளது. எனினும் பனிமூட்டத்தால் கொடைக்கானலில் வால் நட்சத்திரத்தை காண முடியாத நிலை ஏற்பட்டது. வான்வெளியில் நிகழும் சிறு மாற்றங்களை கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி ...