சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது நாளை (12 ஆம் தேதி) தமிழகம்-புதுச்சேரி கடற்கரை இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையைக் கடந்த பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று திருச்சி ரோடு ஹைவே காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். அதில், அவரது மோட்டார் சைக்கிளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ...

கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையம்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து காட்டுயானைகள் இன்று புகுந்தது. 2குட்டி யானைகள் உட்பட மொத்தம் 7 யானைகள் இன்று அங்குள்ள விளை நிலத்துக்குள் புகுந்து சோளபயிர்களை சேதப்படுத்தியது.இதை பார்த்த விவசாயிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் வரைந்து வந்து காட்டுக்குள் யானைகளை துரத்தினார்கள்.இதனால் அந்த ...

நமீபியாவிலிருந்து இந்தியா வந்தடைந்த சீட்டா எனும் சிறுத்தைகள் தனது முதல் இரையை வேட்டையாடியுள்ளது. இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து இந்தியாவின், மத்திய பிரதேசத்திலுள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு செப்டம்பர் 17 அன்று வரவழைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி அவற்றை சரணாலயத்திற்குள் விடுவித்தார். செப்-17 இலிருந்து ...

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் – கோவையில் வெளியாகியுள்ள வீடியோ.! கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலையும், எந்த உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடைகளை ...

கோவை இருகூர்- பீளமேடு டைட்டில் பார்க் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ...

கோவையில் மோட்டார் சைக்கிள் திருடி வந்த வாலிபர்: துரத்தி பிடித்த காவலர் திண்டுகல்லில் பயிற்சி உதவி ஆய்வாளராக வேலை செய்து வருபவர் அருண்குமார். இவர் தற்போது கோவை பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் அருண்குமார் உக்கடம் போலீசாருடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வெவ்வேறு இருசக்கர ...

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு முன் நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க .சார்பில் வருகிற 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .சமூக விரோத செயல்களுக்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜாதி, மதம். பாரா மல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் .அவரது மகன் பிரதீப்( வயது 20) இவர் அதே பகுதி சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார் .இதனால் மனம் உடைந்த பிரதீப் நேற்று அவரது வீட்டில் ...

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: நடுரோட்டில் பெண்ணுக்கு கத்தி குத்தி – மீன் வியாபாரி கைது கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது ...