கோவை ஆர் எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் ஷேக்ஜியா துல் இஸ்லாம் ( வயது 43) இவர் தியாகி குமரன் வீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள இவரது குடோனில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். ...
கோவை : நேபாளம் நாட்டை சேர்ந்தவர் லட்சுமணன் பாரதி ( வயது 24)இவர் கோவை அருகே உள்ள ராக்கி பாளையத்தில் வசித்து வருகிறார்.இவர் தனது சொந்த நாட்டுக்கு செல்வதற்காக நண்பர்களுடன் கோவை ரயில் நிலையம் வந்தார.ரயில் புறப்படுவதற்கு தாமதமானதால் லட்சுமணன் பாரதி ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். ...
படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடிஇன்று ஜப்பான் பயணம் ஆகிறார். தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஜூலை எட்டாம் தேதி ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே நபர் ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக ...
திமுக எம்.பி ஆ. ராசாவும், அமைச்சர் பொன்முடியும் சமீபத்தி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக பொன்முடியின் பேச்சு பலரால் ரசிக்கப்படவில்லை. மேலும், அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி என்று கூறிவிட்டு, பேருந்தில் ஓசியில் செல்கிறீர்கள் என பொதுவெளியில் பொன்முடி பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இந்தச் சூழலில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ...
பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. மக்களிடமிருந்து மனுக்களை கலெக்டர் சமீரன் பெற்றுக் கொண்டார். பின்னர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ...
கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்கு பிரசவத்திற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கோவையை அடுத்த அன்னூரை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று மதியம் அந்த ஆண் குழந்தையை தொட்டிலில் வைத்து விட்டு ...
கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் சார்பில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் கோவை பாலு, பிரசாந்த் ...
திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தற்போது அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அவரை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திமுகவினிலிருந்து விலகுவதாக ...
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிக்கின்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த வான்கூவர் ...