தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது. தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக ...
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதன் பிறகு சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ண பலூன்களையும் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் வானில் பறக்கவிட்டார். ...
விடுமுறை தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீண்ட நாட்களுக்கு பின்னர், தண்ணீர் தற்போது சீராக கொட்டி வருகிறது. இந்நிலையில் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ...
சென்னை: சென்னையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐஜியான பொன் மாணிக்கம் வேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அவர் மீது வழக்கு பதிய கோரி முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பாலவாக்கத்தில் உள்ள காமராஜர் சிலையில் வசித்து வருகிறார் ...
இந்தியாவின் முதல் 24 மணிநேர அரிசி ஏடிஎம் ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் உள்ள மஞ்சேஸ்வரில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரிசி வழங்கும் ஏடிஎம்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பத்ரா கூறினார். இந்தியாவில் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் நோசோமி ஹாஷிமோடோ முன்னிலையில் ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண ...
நீலகிரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி ஆணைப்படி கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் அறிவுறுத்தலின்படி வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்கு நிவாரண பொருட்கள் வழங்க உதகை நகர தலைமை சார்பாக முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் வார்டு கிளை ஆகிய அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது . அதனை ஏற்று அரிசி(510kg), ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி மலையில் இருந்து பொள்ளாச்சி சாலையை இணைக்கக்கூடிய பி ஏ பி பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 60-வது கிலோமீட்டர் பாலம் விரிவாக்கம் செய்வதற்கான பணியினை சுல்தான்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், பிஏபி வாய்க்கால் பாசனதலைவர் வேலுச்சாமி, வரப்பட்டி ஊராட்சித் தலைவர் தர்மராஜ், கிராம ...
முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில், கோவை மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொஅ.ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி சித்தாப்புதூரில் இருந்து துவங்கி, விகேகே மேனன் சாலை வழியாக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ...
ஆடி கார்த்திகையை ஒட்டி சதுரகிரிக்கு ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில் கூட்டநெரிசலால் பலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் சிவராத்திரி அமாவாசை தினங்களில் பக்தர்கள் மலை ஏறி சென்று வழிபடுவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக தற்போது ஆடி அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் ...
கோவை பீளமேடு மணியம் பாப்பு சாமி விதியைச் சேர்ந்தவர் மகேஷ் ராஜா .இவரது மனைவி அன்னபூரணி ( வயது 44)இவர்களது மகன் கோவை போலீஸ் பள்ளி மைதானத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சூடும் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 26 ஆம் தேதி பயிற்சிக்காக ரைபிள் கிளப் சென்றிருந்தார். அங்கு அவரது பையை வைத்துவிட்டு ...