இருசக்கர வாகனம் திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் : வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவ பிரசாத் இவர் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து காலையில் பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள வீட்டின் சி.சி.டி.வி காட்சிகளை பார்த்தபோது மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி யில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு மர்ம நபர்கள் மூன்று பேரை தேடி வருகின்றனர்
Leave a Reply