கேரளாவுக்கு மத்திய அரசு அனைத்து வழிகளிலும் துணை நிற்கும் – சுரேஷ் கோபி..!!

யநாடு நிலச்சரிவு நிலைமை குறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசி உள்ளார் .

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனைத்து வழிகளிலும் துணை நிற்கும் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், இன்று பிரதமரை தொடர்பு கொண்டேன். மீட்புப் பணிகள் சீராக நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என்றார்.

வயநாடு நிலச்சரிவில் அங்கிருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு நடந்த இடத்தில் மீட்பு படை வீரர்கள் தொடர்ந்து மக்களை மீட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளை செய்து வருவதாகவும் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். எந்த உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக ஆட்சியரிடம் தான் தெரிவித்துள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இதனிடையே நிலச்சரி ஏற்பட்டுள்ள பகுதிகளில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.