கோவையில் பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள், மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு சம்பவம் சங்கிலி தொடராக நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதேபோல நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள ஜோதிபுரம், திருமலை .நாயக்கன்பாளையம் ஜனனி கார்டனை சேர்ந்தவர் அரவிந்த் குமார் அவரது மனைவி ஷோபனா ( வயது 34) இவர் நேற்று சுந்தராபுரத்திலிருந்து டவுன்ஹாலுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பையில் வைத்திருந்த 2 பவுன் செயினை யாரோ திருடிவிட்டனர்.இதே போல கணபதி சுபாஷ் நகரை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மனைவி மரகதம் ( வயது 63 )இவர் நேற்று நீலாம்பூரில் நடந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு சென்றிருந்தார் .சாமி கும்பிட்டு விட்டு டவுன் பஸ்சில் பீளமேடு நவஇந்தியா வந்து கொண்டிருந்தார்.பின்னர் அங்கிருந்து மற்றொரு டவுன் பஸ்சில் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்துக்கு சென்றார்.பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கியதும் இவரது அணிந்திருந்த 6 பவுன் செயினை காணவில்லை யாரோ திருடிவிட்டனர் .இது குறித்து மரகதம் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த கொள்ளை சம்பவம் பெண்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.